கொரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகத்தையும்  உலுக்கியது. வைரஸ் தொற்று காரணமாக  லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் மக்களின் பொருளாதாரம் நலிவடைந்தது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி மிகுந்த பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த புதிய திட்டம் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதால்  ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை போக்க இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

இந்த இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டத்தின் வாயிலாக தமிழக குழந்தைகளுக்கு வீடு தேடி கல்வி சேவையை வழங்க வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து திட்டத்தை அறிவித்துள்ளார் முதலமைச்சர். இதுகுறித்து முன்னணி தமிழ் நடிகரான சூர்யா விழிப்புணர்வு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் மிகுந்த சமூகப் பொறுப்புடைய தமிழராகவும் திகழும் நடிகர் சூர்யா, தனது அகரம் பவுண்டேஷன் மூலமாக பல கல்வி சார்ந்த நற்பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விளக்கி தன்னார்வலர்களை கல்வி சேவை செய்ய வருமாறு வேண்டுகோள் விடுக்கும்  விழிப்புணர்வு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.