ஓபிஎஸ் மீது வழக்கு போட நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஓபிஎஸ் மீது வழக்கு போட நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Daily news

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருக்கும் தற்போதைய எதிர்க் கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் மீதும், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் மீதும் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில், பெரிய அளவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.

இதனால், அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி மற்றொரு அணியாகவும் இருந்து வருகிறார்.

இந்த சூழலில் தான், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டி இட்டார்.

அந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் திமுக அமொகமாக வெற்றிப் பெற்ற நிலையில், தேனி தொகுதியில் மட்டும் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி பாக்க வைத்தார்.

அத்துடன், கடந்த சட்ட மன்ற தேர்தலில் போடி நாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

ஆனால், இந்த இரு தேர்தல் நடைபெற்ற போதிலும், தேர்தல் சமயத்தில் தங்களுக்கு சொந்தமான சொத்து உள்ளிட்டவை குறித்து உண்மையான தகவல்களை மறைத்து தவறான தகவல்களை அவர்கள் இருவரும் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றும், இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என்றும், தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில் தற்போது, தேனி மாவட்ட குற்றப் பிரிவு போலீசாருக்கு நீதிபதி அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.

அதன்படி,  ஓ. பன்னீர்செல்வம் மீதும், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் மீதும் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

மேலும், இந்த வழக்கை தேனி மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றவும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். 

அத்துடன், இந்த வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

குறிப்பாக, “இந்த வழக்கை தொடர்ந்திருக்கும் தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானிக்கு, தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும், நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டிருந்தார்.

Leave a Comment