வரதட்சணை கொடுமை காரணமாக, மனைவியுடன் நெருக்கமாக இருந்ததை ஆபாசமாகப் படம் எடுத்து மனைவியின் சகோதரனுக்குக் கணவனே அனுப்பி வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 

இந்த இளம் பெண்ணிற்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு, தனது மனைவியை அவரது கணவர், வரதட்சணை கேட்டு நாள்தோறும் கொடுமை படுத்த தொடங்கி உள்ளார். ஆனால், இதனையெல்லாம் அவரது மனைவி பொறுத்துக்கொண்டு, தனது கணவருடன் அவர் குடும்பம் நடத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த அந்த கணவன், தன்னுடைய பெட் ரூமில் ரகசிய கேமரா ஒன்றை பொறுத்தி உள்ளார்.

இதனையடுத்து, தனது மனைவி உடன் அவர் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை, அந்த கேமரா மூலமாக அவர் ரகசியமாகப் படம் எடுத்து வைத்துக்கொண்டு உள்ளார். இந்த ரகசிய கேமரா விசயம் அவரது மனைவிக்கு எதுவும் தெரியவில்லை. இதனால், அந்த அறையிலேயே அவர் தினந்தோறும் உடை மாற்றி வந்துள்ளார். இதனால், அந்த காட்சிகள் எல்லாம், கணவன் பொறுத்தி வைத்திருந்த ரகசிய கேமரால் பதிவாகி இருந்துள்ளது.

ஒரு கட்டத்தில் கணவனின் வரதட்சணை கொடுமையைச் சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாமல், பொறுமை இழந்த அவரது மனைவி, தனது கணவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் கணவரைக் காவல் நிலையம் வரவழைத்து விசாரித்தனர். 

இதனால், கடும் கோபம் அடைந்த அந்த கணவன், தனது மனைவியிடம் “வரதட்சணை புகாரை திரும்பப்பெறுமாறு” தொடர்ந்து மிரட்டி உள்ளார்.

அப்போது, “மனைவியுடன் ஒழுங்காக வாழும்படி” அந்த கணவனை போலீசார் கடுமையாக எச்சரித்து உள்ளனர்.

இதனால், இன்னும் ஆத்திரமடைந்த அந்த கணவன், மனைவியோடு நெருக்கமாக இருந்த படங்களை, தனது மனைவியின் சகோதரனுக்கு அனுப்பி வைத்து உள்ளார். 

அத்துடன், “என் மீதான வரதட்சணை புகாரை வாபஸ் பெற வில்லை என்றால், இந்த படங்களை எல்லாம் சமூக வலைளத்தில் வெளியிட்டு, உங்கள் குடும்ப மானத்தை வாங்கி விடுவேன்” என்றும், அவர் பகிரங்கமாக மிரட்டி உள்ளார். தனது சகோதரியின் ஆபாச படங்களைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் கணவனைக் கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, வரதட்சணை கொடுமை காரணமாக, மனைவியுடன் நெருக்கமாக இருந்ததை ஆபாசமாகப் படம் எடுத்து, மனைவியின் சகோதரனுக்குக் கணவனே அனுப்பிய சம்பவம், மத்தியப் பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.