காதலனோடு உல்லாசமா இருக்கத் திட்டம் போட்ட காதலி, குழந்தையைக் கடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் நிஷு திவேதி என்பவர், அதே பகுதியில் வசிக்கும் நவ்தீப் சிங் என்ற இளைஞரைக் காதலித்து வந்து உள்ளார்.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், அந்த பகுதியின் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சேர்ந்து அவர்கள் ஊர் சுற்றி வந்து உள்ளனர். இப்படியாக, அவர்களது காதல் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து உள்ளது.

இப்படியான நிலையில், அவர்களது காதல் அவர்களது இருவரின் வீட்டிலும் தெரிந்து உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இருவரின் குடும்பத்தினரும், இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அத்துடன், “இனி, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக் கூடாது என்று, இரு வீட்டாரும், தங்களது பிள்ளைகளைக் கடுமையாக எச்சரித்து” வந்திருக்கின்றனர். 

இதனால், சிறுது காலம் இருவரும் சந்திக்காமல் தவிர்த்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் இருவராலும் சந்திக்க முடியாமல் இருக்க முடியவில்லை. இதனால், காதலர்கள் இருவரும் மிகவும் ரகசியமாகச் சந்தித்து வந்தார்கள். 

காதலர்கள் இருவரின் ரகசிய சந்திப்பையும் அவர்களின் குடும்பத்தினர் கண்டு பிடித்து மீண்டும் கடுமையாக எச்சரித்து உள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில், இந்த பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்து வந்த காதல் ஜோடிகள் இருவரும், அங்குள்ள ஹோட்டலில் ஒன்றாகத் தங்கி உல்லாசமாக இருக்க, ஒரு பெரிய மாஸ்டர் பிளானே போட்டுள்ளார்கள். 

அதன்படி, அந்த காதலி நிஷு திவேதி, தனது உறவினரின் 3 வயதான குழந்தையைக் கடத்தி, “இந்த குழந்தை எங்களது குழந்தை” என்று கூறினால், அந்த ஹோட்டல் உரிமையாளர் தங்களை “கணவன் - மனைவி” என்று, நம்பி ரூம் கொடுப்பார் என்று நினைத்துத் திட்டத்தைச் செயல்படுத்த முயன்று உள்ளனர்.

திட்டமிட்டபடி, காதலி நிஷு திவேதி, நேற்றைய தினம் 9 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அந்த 3 வயது குழந்தையைக் கடத்தி பஞ்சாபின் ஜலந்தரில் வசித்து வந்த தனது காதலன் நவ்தீப் சிங்கிடம் சென்று இருக்கிறார். 

அதன் பிறகு, அவர்கள் இருவரும் அந்த குழந்தையோடு அங்குள்ள ஒரு ஹோட்டலில் “நாங்கள் கணவன் - மனைவி என்றும், இது எங்களின் குழந்தை என்றும் கூறி” அங்கு ரூம் போட சென்றிருக்கிறார்கள். 

அந்த நேரத்தில், காணாமல் போன குழந்தையின் பெற்றோர், “எங்களின் குழந்தையைக் காணவில்லை” என்று, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளனர். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மாயமான குழந்தையைக் கண்டுபிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினர். அப்போது, அந்த குழந்தையின் அத்தை, நிஷு குழந்தையைக் கடத்தியதைக் கண்டறிந்து போலீசாரிடம் கூறி உள்ளார். 

அதன் படி, அந்த பெண்ணின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து, அந்த பெண் இருக்கும் இடத்திற்கே சென்ற போலீசார், குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். 

அத்துடன், குழந்தையைக் கடத்திய பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் தான், காதலனோடு உல்லாசமா இருக்கத் திட்டம் போட்டு, குழந்தையைக் கடத்தியதாக அந்த காதலி கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட போலீசாரும், அவரது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.