ஆசையாக பேசி கவர்ச்சி காட்டும் இளம் பெண் ஒருவர், பல தொழிலதிபர்களைத் தனது வலையில் வீழ்த்தி பல கோடிகளை சுருட்டியது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான ப்ரியங்கா என்கிற இளம் பெண், உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருக்கும் பல தொழில் அதிபர்களை குறிவைத்து, அவர்களை வீழ்த்தி பணம் பறித்து பல கோடிகளை சுருட்டியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இது, பற்றி போலீசார் விசாரித்த போது, அது உண்மை என்பது தெரிய வந்தது. இதனால், சம்மந்தப்பட்ட அந்த பெண்ணை பொறி வைத்து பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து, அந்த பெண்ணை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார், அந்த பெண்ணை கண்டுபிடித்து மிகவும் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, அந்த பெண் பல தொழிலதிபர்களுக்கு முதலில் போன் செய்து, போட்டு ஆசை ஆசையாகப் பேசி அவர்களைச் சபலப்பட வைத்து, அதன் பிறகு அவர்களை நேரில் சந்திக்க செல்லும் போது, மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து சென்று, அந்த தொழில் அதிபர்களை அப்படியே தன் பக்கம் கவர்ந்திழுத்து, தனது வலையில் சிக்க வைத்துவிடுவாராம்.

இப்படியாக, அந்த 30 வயது இளம் பெண் ப்ரியாங்காவின் வலையில் விழுந்த பல தொழில் அதிபர்களுடன் தனிமையில் இருக்கும் போட்டோ மற்றும்  வீடியோக்களை மிகவும் ரகசியமான முறையில் கேமெரா மூலம் எடுத்துக்கொள்வதும், அதன் தொடர்ச்சியாக, முக்கியமான நேரத்தில் ஆபாசமாக எடுத்து வைத்திருக்கும் பல போட்டோக்களையும், காணொளிகளையும் ரகசியமாகச் சம்மந்தப்பட்ட தொழில் அதிபர்களிடம் காண்பித்து அந்த தொழிலதிபர்களை மிரட்டி மிரட்டி, பல கோடிகள் பணம் பறித்து வந்திருக்கிறார். 

இப்படி, சமூக அந்தஸ்துக்கு பயந்துபோன பல தொழிலதிபர்கள், அந்த கவர்ச்சிக் கன்னியிடம் தங்களது கோடிக்கணக்கான பணங்களை கொட்டி கொடுத்து உள்ளனர். அதில் சிலர், போலீசில் ரகசியமாகச் சொல்லி, அந்த பெண்ணை பிடிக்க முயன்று உள்ளனர். 

அத்துடன், அகிலேஷ் குமார் என்ற வழக்கறிஞர் இந்த கும்பலின் தலைவராக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், போலீசார் விரித்த வலையில் அந்த பெண் தானாக வந்து விழுந்திருக்கிறார். 

அப்படி, கடந்த 7 ஆம் தேதி ஞாயிற்று கிழமையன்று அந்த பெண் ஷாஜகான்பூரிலிருந்து போலீசாரால் அதிரடியாக அதுவும் ஆதரப் பூர்வமாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதனையடுத்து, அந்த பெண்ணிடம் போலீசார் மிக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இவற்றுடன், இது வரை தொழில் அதிகர்களிடம் இருந்து மிரட்டிப் பறிக்கப்பட்ட பணம் எங்கே வைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்தும், அந்த பணம் எல்லாம் யாரிடம் கொடுத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்தும், இதற்கு வேறு யாரால்லாம் பின்புலமாக இருக்கிறார்கள் என்பது குறித்தும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.