கர்நாடக அமைச்சருடன் நெருக்கமாக இருந்த பெண்.. பாதுகாப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட சம்பவம், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, இளம் பெண் ஒருவருடன் ஆபாச வீடியோவில் இருப்பது போன்று, உள்ளூர் செய்தி தொலைக்காட்சியில் செய்திகள் வெளியானது.

அதாவது, கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவை சேர்ந்த 60 வயதான ரமேஷ் ஜர்கிஹோலி, அங்குள்ள ஒரு ஹோட்டல் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடையுடன் இளம் பெண்ணுடன் ஒருவருடன் ஆபாசமான முறையில் இருக்கும் வீடியோ மற்றும் வாட்ஸ் ஆப்பில் பேசிக்கொண்ட ஆடியோ ஆதாரங்கள் கடந்த வாரம் வெளியாகி கர்நாடக மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. 

வட கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், “அணைகள் குறித்து ஆவணப் படம் எடுக்கப் போவதாகவும், அதற்கு அரசு சார்பில் உதவி செய்யுமாறும்” அமைச்சர் ஜர்கிஹோலியை அணுகி இருக்கிறார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறிய அமைச்சர் ஜர்கி ஹோலி, அவருடன் பலமுறை பாலியல் உறவு வைத்துக்கொண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. 

ஆனால், அவர் வாக்குறுதி அளித்த படி அரசு வேலையும் அவர் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், “தாங்கள் இருவரும் தனிமையில் இருந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பெண்ணிடம் இருப்பதை அறிந்துகொண்ட அமைச்சர் ஜர்கி ஹோலி, அந்த வீடியோவை தர வேண்டும்” என்று அந்த இளம் பெண்ணிடம் கேட்டிருக்கிறார்.

“அப்படி, அந்த வீடியோவை தர மறுத்தால், உன் குடும்பத்தையே அழித்து விடுவேன்” என்று, அந்த இளம் பெண்ணுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், தனது குடும்பத்தினரும், அமைச்சரின் இந்த மிரட்டல் குறித்து, கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்கத் தலைவர் தினேஷ் கல்லஹள்ளியிடம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்தே, இந்த விசயம் வெளி உலகிற்குத் தெரிய வந்தது.

அதன் படியே, இளம் பெண்ணுடன் பாஜக அமைச்சர் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் ஆபாச வீடியோ, உள்ளூர் செய்தி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹள்ளி பெங்களூருவில் உள்ள கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 இதனால், அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு அனுப்பி வைத்தார். 

அத்துடன், “தன் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபணமாகும்” என்றும், அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், அமைச்சர் ரமேஷ் ரமேஷ் ஜார்கிகோளி உடன் வீடியோவில் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் இளம் பெண், நேற்று இரவு ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ 34 வினாடிகள் மட்டுமே ஓடுகிறது. அந்த வீடியோவில் பேசி உள்ள சம்மந்தப்பட்ட இளம் பெண், “ரமேஷ் ஜார்கிகோளியுடன் நான் இருந்த ஆபாச வீடியோ வெளியானதன் மூலம் எனது மானம், மரியாதை போய் விட்டது என்றும், இந்த வீடியோ யார் எடுத்தது? யார் வெளியிட்டது? என்பது பற்றி எனக்கு தெரியாது” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “எனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரமேஷ் ஜார்கிகோளி கூறினார். ஆபாச வீடியோ வெளியானது குறித்து எனது வீட்டில் வந்து நிறைய பேர் கேட்கிறார்கள். எனது தந்தையும், தாயும் 2 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளனர். நானும் 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து விட்டேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது.

இந்த வீடியோ வெளியான விவகாரத்தால் எனது குடும்பத்தினருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன. இதனால், உள்துறை அமைச்சர் பசவராஜ் 

பொம்மையிடம் எனது குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்க கேட்டு கொள்கிறேன்” என்று, அந்த வீடியோவில் அவர் கண்ணீருடன் கேட்டுக்கொண்டு உள்ளார்.

அமைச்சருடன் பேசப்பட்ட சம்மந்தப்பட்ட இளம் பெண்ணே பாதுகாப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு உள்ளதால், இந்த ஆபாச வீடியோ விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விசயம், கர்நாடக அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்பி உள்ளது.