ஐபிஎல் போட்டிகளில் புதியதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளதால், எப்போது ஏலம் நடத்தப்படும் என்ற விபரங்களும் வெளியாகி உள்ளன. 

கடந்த 2008 ஆம் ஆண்டு முதன் முதலாகத் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டியானது, இது வரை 13 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. 

தற்போது நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டுக்கான 13 வது ஐபிஎல் தொடர், ரசிகர்கள் இன்றியே பரபரப்பாக நடந்து முடிந்தது. டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, 5 வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்று வெற்றி பெற்றது. 

அதன் தொடர்ச்சியாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நடைபெற்றது. அதன் படி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் அடுத்த மாதம் 9 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது.

அத்துடன், 13 வது ஐபிஎல் தொடர் முடிந்த உடன் வரும் ஆண்டு முதல் புதிதாக மேலும் ஒரு அணியைச் சேர்க்க உள்ளதாகத் தகவல்கள் கசிந்தன. அதன் தொடர்ச்சியாகவே, ஆண்டு புதிதாக மேலும் இரு அணியை ஐபிஎல் போட்டிகளில் சேர்க்க உள்ளதாக, பிசிசிஐ கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியான.

இந்த நிலையில், பிசிசிஐன் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.

இதில், ஆட்சி மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் செயலாக்கம் குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேச பட்ட விசயங்கள் பற்றி பெயர் கூற விரும்பாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார்.

அதில், வரும் 2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் 10 அணிகள் கொண்டதாக இருக்கும் என்றும், இதில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படும்” என்றும், குறிப்பிட்டார்.

அத்துடன், “இந்த புதிய அணிகளுக்கான ஏல நடைமுறை இந்த 14 வது ஐபிஎல் தொடர் முடிந்த உடன் மே மாதத்தில் நடைபெறும்” என்றும், அவர் கூறினார்.

மேலும், அடுத்து ஆண்டுக்கான ஐபிஎல் சீசனுக்கான தயாரிப்பு பணிகளை பிசிசிஐ, தற்போதே தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அடுத்து ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ஒரு முழுமையான ஏலத்தையும் பிசிசிஐ நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.