நடிகர் ஜீவா, காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள பயிற்சியாளராக அறிமுகமானார் யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு படத்தில் நல்ல ரோலில் நடித்திருந்த யாஷிகா ஆனந்துக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. துருவங்கள் பதினாறு படத்தைத் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். அதில் இவரது கவர்ச்சி பாத்திரம் இவரை உச்சத்தில் கொண்டு நிறுத்தியது. 

அந்த படத்தை தொடர்ந்து, நோட்டா, ஜாம்பி, மூக்குத்தி அம்மன் என தொடர்ந்து கிளாமர் ரோல்களே கிடைத்து வந்தது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி தமிழில் டிஆர்பி கிங் நிகழ்ச்சியாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் யாஷிகா ஆனந்த். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூடினர். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக அவர் பதிவிடும் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் டோட்டலாக தனது உடல் எடையை குறைத்தார். தனது ஒல்லி பெல்லி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

கவர்ச்சிக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து விட்டு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடிக்க களமிறங்கி உள்ளார் யாஷிகா ஆனந்த். சல்பர் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். 

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார் யாஷிகா. அதில், துபாய் பார்க்கில் இருக்கும் ஒட்டகம் மற்றும் கரடிக்கு உணவு கொடுப்பது, சிங்கத்தை கயிறு கட்டி இழுப்பது, பாம்பை தோளில் தூக்குவது என்று விலங்குகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் எனும் படத்திலும் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. இந்த காம்போவை கண்டுகளிக்க மிகுந்த ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.