“இந்தியப் பெண்கள் கணவனை பகிர்ந்துக்கொள்ள விரும்புவதில்லை, மாறாக மனைவிகளுக்கு கணவன் மீது பொசசிவ்னஸ் அதிகம்” என்று, அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது, இணையத்தில் ரைவலாகி வருகிறது.

உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் கலாச்சார பண்பாடு என்பது பரம்பரியாகமாக தொடரும் ஒரு பந்தமாகவே இன்று வரை இருக்கிறது. 

என்றாலும், வெளிநாட்டு கலாச்சாரங்கள் இந்தியாவில் உட்புகுந்தது முதல், 'லிவிங் டுகெதர்' உட்பட சில புதிய கலாச்சாரங்கள் சற்று பெருகிவிட்டாலும், அந்த காதலியோ அல்லது மனைவியோ தங்களது காதலனையும் - கணவனையும் யாருக்கும் விட்டுக்கொடுப்பதில்லை என்றும், மாறாக காதலிகளும், மனைவிகளும் தங்களது துணை மீது அதிக பொசசிவ்னஸ் கொண்டவர்கள் என்றும் தொடர்ந்து கூறப்படும் கருத்தாகவே இருந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாகவே, “வெளிநாடுளை ஒப்பிடும் போது, இந்தியப் பெண்கள் தங்கள் கணவர்மார்கள் மீது அதீத அன்பை மற்றும் பொசசிவ்னஸ் வைத்திருக்கிறார்கள்” என்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் தற்போது கருத்து கூறியுள்ளது.

அதாவது, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சுஷில் குமார் என்பவர், ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணை அவர்  2 வதாக திருமணம் செய்து கொண்டார். 

அத்துடன், இவர் தனது முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல், 2 வது திருமணத்தை செய்து கொண்டதால், அந்த நபருக்கும் அவரின் முதல் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது. 

இந்த சூழலில் தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அத்துடன், அந்த பெண் தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக, தனது கணவன் சுஷில் குமார் மீது, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அதன் படியே, அந்த நபரை போலீசார் கைது செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, “தன்னை விடுதலை செய்யக் கோரி” சுஷில் குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த அம்மாநில கீழமை நீதிமன்றம், இந்த மனுவை அதிரடியாக நிராகரித்தது. இதனையடுத்து, சுஷில் குமார் அதே மனுவை அங்குள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மனுவானது, நீதிபதி ராகுல் சதூர்வேதி முன்பு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “வெளிநாடுகளை ஒப்பிடும் இந்தியப் பெண்கள் தங்கள் கணவர்கள் மீது அதீத அன்பை வைத்து உள்ளனர்” என்று, குறிப்பிட்டார். 

மேலும், “இந்திய பெண்கள் யாரும் தங்கள் கணவரை, யாரிடமும் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்றும், அப்படியிருக்கும் போது, தனது கணவர் வேறொரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்பது, இந்தியப் பெண்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை” என்றும், தனது கருத்தை முன் வைத்தார்.

குறிப்பாக, “தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவுக்கு கூட இந்திய பெண்கள் சென்று விடுகிறார்கள் என்றும், மேற்குறிப்பிட்ட வழக்கிலும் இது தான் நடந்துள்ளது” என்று குறிப்பிட்ட நீதிபதி, “சுஷில்குமார் வேறு திருமணம் செய்து கொண்டதை தாங்க முடியாமல் தான், அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என்றும், கூறினார். 

“இதனால், இந்த வழக்கில் முதல் மனைவி இருக்கும் போதே, 2 வது திருமணம் செய்துகொண்ட “சுஷில்குமாரை விடுதலை செய்ய முடியாது” என்றும், நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்தார்.

இதனிடையே, “இந்தியப் பெண்கள் கணவனை பகிர்ந்துக்கொள்ள விரும்புவதில்லை என்றும், மாறாக மனைவிகளுக்கு கணவன் மீது பொசசிவ்னஸ் அதிகம்” என்றும், அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது, இணையத்தில் பெரும் ரைவலாகி வருகிறது.