இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் ஜீ வி பிரகாஷ் குமார்.இவர் ஹீரோவாக நடித்த பேச்சுலர்,selfie உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் ஜீ,வி.பிரகாஷ்.

ஹீரோவானாலும் படங்களுக்கு இசையமைப்பதை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.சூர்யா,தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.அடுத்து இவர் நடித்துள்ள சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

ஜீ வி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக ரிலீஸ் தள்ளிப்போன திரைப்படம் ஐங்கரன்.ஜீ வி நடித்து இசையமைத்துள்ள இந்த படத்தினை ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்கியுள்ளார்.காமன் மேன் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

மஹிமா நம்பியார் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.இந்த படம் மே 5ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் இந்த படத்தின் புதிய ட்ரைலர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்