தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்று வருகிறது.

தீவிரவாதிகள் ஒரு ஷாப்பிங் மாலை கைப்பற்ற அதிலிருந்து மக்களை காப்பாற்றும் ஒரு முன்னாள் அதிகாரியின் கதையாக அதிரடி,காமெடி என இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.பல இடங்களில் இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்றான ஜாலியோ ஜூம்கானா பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.விஜய் பாடிய இந்த ஏனெர்கெட்டிக் ஊக்குவிக்கும் பாடல் அவரின் நடன அசைவுகளுடன் ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்று வருகின்றன.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்