கணவனை கட்டிப்போட்டு 5 பேர் கொண்ட கும்பல் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுன நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயத் தொழிலாளியாக பணிபுரியும் விவசாயி ஒருவர், அங்குள்ள குடிசை வீட்டில் தனது 37 வயதான மனைவி மற்றும் மகளோடு வசித்து வந்தார். அந்த விவசாயின் மனைவி ஒரு நேபாள குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவர். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 24 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் அந்த விவசாயி, தனது நேபாளி மனைவியை வீட்டினுள் தூங்க வைத்து விட்டு, அவர் வீட்டின் வெளியே வாசலில் தூங்கி கொண்டிருந்தார். 

அப்போது, அந்த இரவு நேர வேளையில் அங்கு ஒரு கார் வந்துள்ளது. அந்த காதில் இருந்து 5 பேர் இறங்கி வந்து, அந்த விவசாயியைக் கடுமையாகத் தாக்கிவிட்டு விட்டு, அவருடைய வீட்டிற்குள்ளேயே இழுத்து வந்து கட்டி போட்டு உள்ளனர்.

இதனைப் பார்த்த, அந்த விவசாயின் மனைவி, சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைத்து உள்ளார். ஆனால், அந்த 5 பேர் கொண்ட கும்பல், விவசாயியின் நேபாள மனைவியை ஒருவர் பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள். 

இப்படியாக, ஒருவர் பின் ஒருவராக முதலில் 4 பேர் அந்த பெண்ணை நாசம் செய்த நிலையில், 5 வதாக ஒருவன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அப்போது, உயிர் போகும் வலியில் துடித்த அந்த பெண், அந்த ஐந்தாவது நபரை தள்ளி விட்டு சத்தம் போட்டு கத்தி உள்ளார். 

இதனால், பயந்துபோன அந்த கும்பல், அந்த பெண் இறந்து விடுவாளோ? என்று பயந்து அந்த பெண்ணை அப்படியே விட்டு விட்டு, அங்கிருத்து ஓட்டம் பிடித்து உள்ளனர்.

இதனையடுத்து, பக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த பெண்ணையும், அந்த கும்பலால் தாக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவனையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, கணவன் - மனைவி இருவருக்கும் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த குற்றவாளிகள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கணவரை கட்டிப்போட்டு விட்டு, கணவனின் எதிரியிலேயே அவருடைய மனைவியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.