இந்திய திரை உலகின் நட்சத்திர நாயகிகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை நயன்தாரா. முன்னதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள கோல்ட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கோல்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்ந்து இயக்குனர் GS.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் O2 திரைப்படம் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

முன்னதாக நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் திரைப்படத்திலும் நடித்து வரும் நயன்தாரா, தொடர்ந்து  பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.  இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விரைவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது பாபநாசம் அருகே வழுத்தூர் கிராமத்தில் உள்ள கோவிலில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான இங்கு இருவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
 
இந்நிலையில் வழுத்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…