தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்று வருகிறது.தீவிரவாதிகள் ஒரு ஷாப்பிங் மாலை கைப்பற்ற அதிலிருந்து மக்களை காப்பாற்றும் ஒரு முன்னாள் அதிகாரியின் கதையாக அதிரடி,காமெடி என இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.

திரையரங்குகளில் வசூலை குவித்த இந்த படம் மே 11ஆம் OTT-யில் வெளியானது.இந்த படத்தின் மிகப்பெரிய ஹிட் பாடலான அரபிக்குத்து பாடல் வீடீயோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர்.சிவகார்த்திகேயன் வரிகளில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் துள்ளலான நடன அசைவுகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தன.

லிரிக் வீடியோவாகவே பெரிய ஹிட் அடித்து 400 மில்லியன் சமீபத்தில் இந்த பாடல் கடந்தது.தற்போது 411 மில்லியனை கடந்து தென்னிந்தியாவின் அதிகம் பார்க்கப்பட்ட படத்தின் லிரிக் வீடியோ என்ற பெருமையை புட்டபொம்மா பாடலை ஓவர்டேக் செய்து செய்துள்ளது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்