“உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்யும் வழக்கம், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் நடப்பதாக” ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவின் உறவு முறைகள் மற்றும் பண்பாட்டு கலாச்சாரங்கள் யாவும், ஒட்டுமொத்த வெளிநாடுகளுக்கும் கண்டிப்பாய் பிடித்த ஒரு விசயமாக இருந்து வருகிறது.

இதில், மிக முக்கியமாக இந்தியாவில் தொன்று தொட்டு “உறவு முறைகளுக்குள், அதுவும் நெருங்கிய உறவுக்காரரையே திருமணம் செய்துகொள்ளும் பழக்கம், இன்று வரை பரவலாக இருந்து வரும் ஒரு விசயமாக உள்ளது.

ஆனால், உறவு முறைகளுக்குள் திருமணம் செய்யும் பழக்கம், முன்பை ஒப்பிடும் போது தற்போது முற்றிலுமாக குறைந்து உள்ளது. முக்கியமாக, காலம் காலமாக இருந்து வரும் இந்த பழக்கம் நாளுக்கு நாள் குறைவதையும் நாம் காண முடிகிறது. 

இப்படியான சூழலில் தான் இந்தியாவில் “உறவு முறைகளுக்குள் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை எந்த அளவில் இருக்கிறது” என்பது குறித்து தேசிய குடும்ப நல ஆய்வகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 

அந்த ஆய்வின் படி, இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் “உறவுக்காரரை திருமணம் செய்யும் பெண்களின் சதவிகிதம் அதிக அளவில் உள்ளதாக” ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

அந்த வகையில், இந்தியாவில் மாநில அளவில் பார்க்கும் போது,

தமிழ்நாட்டில் - 27.9 சதவீதமாக உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 26.6 சதவீதமாக இருக்கிறது. 
ஆந்திரா மாநிலத்தில் -26.4 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரியில் - 19.2 சதவீதமாக உள்ளது. 
தெலங்கானா மாநிலத்தில் சற்று குறைந்து - 18.2 சதவீதமாக இருக்கிறது.

இதன் மூலமாக, “தனது உறவினரை திருமணம் செய்யும் பெண்கள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயெ தமிழ்நாடு முன்னிலையில் அதுவும் முதல் மாநிலமாக திகழ்கிறது” தெரிய வந்துள்ளது. 

இந்த ஆய்வானது கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஆய்வின் படி, இன்றைய இளம் பெண்கள் பலரும் தங்கள் கணவருக்கு ஏதோவொரு வகையில் உறவுக்காரராக இருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இதனை மத ரீதியாக பார்க்கையில், “இஸ்லாம், புத்த மதம் மற்றும் நியோ புத்த மதத்தை சேர்ந்தோர் உறவுக்குள் திருமணம் செய்யும் பழக்கத்தில் அதிக் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது” குறிப்பிடத்தக்கது.