2 ஆம் உலகப்போரில் காணாமல்போன விமானம் தற்போது இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வு, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இரண்டாம் உலகப் நமது காலத்தில் நடக்கவில்லை என்றாலும், நாம் படித்து தெரிந்துகொண்ட வரலாற்று சம்பவங்களை எல்லாம் யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. 

அப்படி, 2 ஆம் உலகப் போரில் நடந்துகொண்டிருந்த நேரத்தில், அமெரிக்கா ராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான போர் விமானங்கள், இந்தியா, சீனா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் விழுந்து மாயமானது.

அந்த வகையில் தான், சீனாவின் குன்மிங்கில் இருந்து கடந்த 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி 46 ரக அமெரிக்க போர் விமானம், புறப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் ரேடாருடனா தொடர்பை முற்றிலுமாக இழந்து, அந்த போர் விமானம் அப்படியே காணாமல் போனது.

அப்போது, “இந்த காணாமல் போன இந்த போர் விமானம், எங்கு மாயகமா மறைந்தது?” என்று தேடிய போது, அப்போது அதனை சரியாக கண்டுப்பிடிக்க முடியவில்லை.

அத்துடன், அந்த போர் விமானம் மாயமான நேரத்தில், மிகவும் மோசமான வானிலை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இந்தியாவின் அருணாச்சல பிரதேச இமயமலை பகுதியில் அமெரிக்காவிற்கு சொந்தமான அந்த போர் விமானம் விழுந்திருக்கலாம் என்கிற தகவல்கள் மட்டும் வெளியானது.

இந்த சூழலில் தான், மாயமான போர் விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில், அந்த விமானத்தில் பயணம் செய்த போர் வீரர் ஒருவரின் மகன் தற்போது முழு மூச்சாக களத்தில் இறங்கி தேடினார்.

அதாவது, அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பில்.ஸ்கேர் என்ற அந்த நபர், தனது தந்தை சென்ற விமான மாயமானது தொடர்பாக தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கினார். 

அதன்படி, இந்த பணியை அவர் அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குக்லெஸ் என்பவரிடம் அந்த பணியை  ஒப்படைத்திருந்தார் என்றும், கூறப்படுகிறது. 

அதன் படி, தனது குழுவினருடன் குக்லெஸ் இமயமலை பகுதியில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு இருந்தார்.

இந்த தீவிர தேடுதல் வேட்டையில் குக்லேஸ் என்கிற உள்ளூர் வழிகாட்டிகள் குழுவும் இணைந்து, இமயமலை உச்சியில் பல நாட்கள் முகாமிட்டு மிக தீவிரமாக தேடுதல் வேட்டையை நடத்தி வந்தது.

இந்த நிலையில் தான், மிக கடுமையான தேடுதல் வேட்டைக்குப் பிறகு, பனி மூடிய ஆழமான ஒரு பகுதியில் அமெரிக்காவிற்கு சொந்தமான அந்த போர் விமானத்தின் பாகமானது நேற்றையத் தினம் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதாவது, “மிக அதிகமான பனி படர்ந்த பாறைகளுக்கு நடுவே அந்த அமெரிக்காவின் போர் விமானமானது, அதன் வால்பகுதியில் இருந்த  குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்தததாக” கிளேட்டன் குக்லெஸ் கூறியுள்ளார். 

குறிப்பாக, அந்த போர் விமானம் மாயமாகி கிட்டதட்ட 77 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான், கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து, விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட கிளேட்டன் குக்லெஸ் பேசும் போது, “மிக கடுமையான முயற்சிக்கு பிறகு விமானம் கண்டுபடிக்கப்பட்டு உள்ளது என்றும், அதுவும் சிதைந்த நிலையில் காணப்படும் எஞ்சியிருந்த விமான பாகங்களில் மனிதர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இதில் இல்லை” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, 2 ஆம் உலகப்போர் காலக்கட்டத்தில் மாயமான அமெரிக்காவின் போர் விமானம், 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை பகுதியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, வரலாற்று ஆய்வாளர்கள் இடையே பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.