ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று  வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் மற்றும் டோல் கேட்  விலை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த நூறு நாட்களுக்கு  மேலாக பெட்ரோல் , டீசல் விலை அதிகரிக்காமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. அதேபோல் சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் ரூ.50 அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் செய்து வருகின்றனர். பெட்ரோல், டீசல், சிலிண்டரை தொடர்ந்து தற்போது வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் திடீரென அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் சிலிண்டரின் விலையை மத்திய அரசு உயர்த்தி வரும் நிலையில் ஏப்ரல் 1-ம் தேதியான இன்று வணிக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையும்  உயர்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை இன்று ரூ.268.50 பைசா 50 காசுகள் உயர்ந்துள்ளது.  இதன்மூலம் சிலிண்டர் விலையானது ரூ.2,406 க்கு விற்பனையாகிறது.  14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 965.50 பைசாவாக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வணிக காஸ் சிலிண்டர் விலை ஏறியது தொடர்ந்து, இன்று ஏப்ரல் 1 முதல் டோல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் இனி வெளியூர் பயணங்கள் செல்ல அதிக செலவு ஆகும் என்று தெரிகிறது. இந்த புதிய விலை ஏற்றத்திற்கு இந்தியாவின் சாலை போக்குவரத்து அமைப்பான NHAI மத்திய அரசிடம் சமர்பித்திருந்தது. தற்போது அந்த மனுவிற்கு மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளதாக தெரிகிறது. இதன் முழு விவரங்களும் தற்போது தெரியவில்லை என்றாலும் மாநிலங்கள் வாரியாக இந்த விலை ஏற்றம் 15% அளவிற்கு இருக்கும் என்று தெரிகிறது.

அதனைத்தொடர்ந்து தமிழகத்தை பொறுத்தவரை இந்த சுங்க சாவடி கட்டண உயர்வு 10 முதல் 15% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த கட்டண உயர்வு இட வாரியாக மாறுபடும் என்று தெரிகிறது. அசாம் போன்ற வடகிழக்கு மாநிலத்தில் கூட இந்த டோல் கட்டணம் 15% உயர்ந்துள்ளது. இந்த டோல் கட்டண உயர்வு பல நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களை கவலையடைய செய்திருக்கிறது. இந்த கட்டண உயர்வால் ஏற்கனவே அதிகரித்துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணத்தை போலவே தற்போது சுங்க சாவடிகளிலும் அதிக தொகை செலுத்தவேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் 22-ம் தேதியிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6.40 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனுடன் சேர்த்து இந்த சுங்க கட்டண உயர்வு சாமானிய மக்களை மேலும் தலைவலிக்கு உள்ளாகியுள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு முக்கிய காரணமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே நாடாகும் போர் பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பே பெட்ரோல் விலை மூன்று டிஜிட் இருந்தது. தற்போது இதுபோன்ற விலைவாசி உயர்வு மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.