IPL2022 நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னையின் தோல்விக்கு சிவம் துபே வீசிய 19 வது ஓவர் மட்டுமே காரணமில்லை என்றும், சொல்லிக்கொள்ளும் படியாக, சிறந்த பவுளர்கள் CSK அணியில் இல்லாமல் போனதே மிக முக்கிய காரணம் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

CSK தோல்விக்கான காரணங்கள்

- #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் - #LSG லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்த நிலையில், போட்டியின் திருப்பு முனையாக 19 வது ஓவரை ஷிவம் துபே வீச வந்தார். அந்த 19 வது ஓவரில் அவர், 25 ரன்களை வாரி வழங்கினார். இதுவே லக்னோ அணி எளிதாக வெற்றி பெற வாய்ப்பாக அமைந்தது. இதுவே சென்னை அணியின் படுதோல்விக்கு முதல் காரணம் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

- ஷிவம் துபே, எதையுமே புதிதாக கற்றுக்கொள்ளவில்லை என்றே விமர்சனம் எழுந்து உள்ளது.

- #CSK வின் நேற்றைய போட்டியில், 2 வது மிக முக்கிய பிரச்சனை எல்லாமே பந்துவீச்சில்தான் வந்து நின்றது.

- கடைசி 2 ஓவர்களை வீச டெத் ஓவர் பவுளர்கள் சென்னை அணியில் இல்லாமல் போனார்கள்.

- சென்னை அணியின் பந்துவீச்சு ரொம்பவே சுமாராக இருந்தது. “எனக்கு பால் போட தெரியும்” என்ற அளவிலேயே CSK டீமில் பவுளர்கள் இருந்தார்கள் என்பதே உண்மை.

- சென்னையின் பந்துவீச்சாளர்கள் பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டை கூட எடுத்திருக்கவில்லை. அந்த அளவிலான பவுளர்களே, சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார்கள். இதே கொடுமைதான், கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியிலும், பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாத அளவில்தான், சென்னையின் பந்து வீச்சு அமைந்திருந்தது.

- இந்த போட்டியில் துஷார் தேஷ்பாண்டேவும், அறிமுக வீரர் முகேஷ் சௌத்ரியும் பவர்ப்ளேயில் ஓவர்களை பந்து வீசி ரன்களையும் கட்டுப்படுத்தவில்லை. விக்கெட்டுக்களையும் எடுக்கவில்லை. இவர்கள் இருவருமே அனுபவமற்ற புதிய வீரர்கள் என்பது கவனிப்பட வேண்டிய விசயம்.

- அனுபவமற்ற இந்திய பந்துவீச்சாளர்கள், செட்டில் ஆகாத வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுதான் CSK டீம் விளையாடியது.

- பனி பொழிவு காரணமாக, ஸ்பின் வீசக்கூடிய ஜடேஜா மற்றும் மொயீன் அலிக்கு ஆகிய இருவரும் ஒரு சில ஓவர்களுக்கு மேல் கொடுக்கப்படாமல் போனதும் ஒரு காரணம்.

- மிக முக்கியமாக, #CSK வில் ப்ராவோ, ப்ரெட்டோரியஸ் ஆகிய 2 பவுளர்களை தவிர, சிறந்த பவுளர்கள் வேறு யாரும் இல்லை என்பேதே உண்மை. ஆனால், இவர்கள் இந்த 2 பவுளர்களுமே டெத் ஓவர்கள் வீசக்கூடியவர்கள். ஆனால், இவர்களை முதல் 6 ஓவர்களை வீச வைத்ததும், மிடில் ஓவர்களை வீச வைத்த காரணத்தாலேயே, கடைசி 2 ஓவர்களான டெத் ஓவர்களை வீச அணியில் ஆள் இல்லாமல் போனது.

- கடைசி ஓவரை எந்த அனுபவமும் இல்லாத முதல் போட்டியை களம் இறக்கவிடப்பட்ட முகேஷ் சவுத்ரி வந்து வீசியதுடன், அவர் முதல் 2 ஒயிடுகளை வீசி ஒரு சிக்சரையும் வாரி வழங்கியதால், லக்னோ அணி எளிதாகவே வெற்றிப் பெற்றது.

அதே போல், 

- #CSK பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் அடித்துக்கொண்டிருக்கும் வேளையில், அதுவரை பந்து வீசாத ஷிவம் துபேவை, 19 வது ஓவரான டெத் ஓவர் வழங்கியது துளியும் நியாயமில்லை என்று, சுனில் கவாஸ்கர் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

- #CSK அணியில் பௌலிங் குழறுபடிகள், கேட்ச் டிராப், கேப்டன்ஷிப் குறைபாடுகள் எல்லாமே வெளிப்படையான குறைபாடுகளவே தெரிகிறது.

- #CSK அடுத்த போட்டியில் சுதாரித்துக்கொள்ளா விட்டால், கடந்த இரு போட்டிகளிலும் செய்த அதே தவறை திருத்திக்கொள்ளா விட்டால், சிறந்த பவுளர்களை அடுத்த போட்டியில் களமிறக்காவிட்டால், #CSK அணியின் தோல்வியை தவிர்க்கவே முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை என்பதே உண்மை.