தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் குறிப்பிடப்படும் சிறந்த நடிகையாகவும் திகழும் நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் ஆயிரத்தில் ஒருவன் மங்காத்தா விஸ்வரூபம் அரண்மனை தரமணி துப்பறிவாளன் அவள் வடசென்னை என பலவிதமான திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அடுத்ததாக நடிகர் சிபி சத்யராஜ் உடன் இணைந்து வட்டம், பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் புதிய படம் மற்றும் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் மற்றொரு படம் என அடுத்தடுத்து திரைப்படங்களில் ஆண்ட்ரியா தற்போது நடித்து வருகிறார். மாளிகை & கா உள்ளிட்ட த்ரில்லர் திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பில் அடுத்த த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ளது நோ என்ட்ரி திரைப்படம். இயக்குனர் R.அழகு கார்த்திக் எழுதி இயக்கியுள்ள நோ என்ட்ரி திரைப்படத்தை ஜம்போ பிலிம்ஸ் சார்பில் ஸ்ரீதர் அருணாச்சலம் தயாரித்துள்ளார். ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவில் அஜீஷ் இசை அமைத்துள்ளார்.

ஆண்ட்ரியாவுடன் இணைந்து ஆதவ் கண்ணதாசன் ரன்யா ராவ் மனாஸ் ஜெயஸ்ரீ ஜான்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நோ என்ட்ரி படத்திலிருந்து ஓ ரேபா என்னும் பாடல் தற்போது வெளியானது.  அஜீஷ் இசையில் கு.கார்த்தி எழுதியுள்ள ஓ ரேபா பாடலை பிரபல பாடகர்கள் பென்னி தயால் மற்றும் ஜொனிதா காந்தி இணைந்து பாடியுள்ளனர். ஓ ரேபா பாடல் லிரிக் வீடியோ இதோ…