செல்போன் அழைப்புகளில் வரும் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பினை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலிக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதன் காரணமாக இந்தியாவிலும் கொரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியது. இதனால் கொரோனா குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் செல்போன் அழைப்புகளை காலங்களாக விழிப்புணர்வு செய்தி இடம்பெற்றது. ஒருவரை அவசரமாக நாம் தொடர்பு கொண்டு பேச அழைத்தாலும் கூட, கொரோனா விழிப்புணர்வு  அறிவிப்பை நான் கேட்ட பிறகுதான் பேச முடியும் என்ற நிலையும் ஏற்பட்டது இதனால் மக்கள் சில சமயங்களில் எரிச்சலடைத்தனர்.

இந்நிலையில் பொது மக்கள் மத்தியில் குறித்த கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் கொரோனா விழிப்புணர்வு  காலர்ட்யூன் பெரும் பங்காற்றியது என்று சொன்னால் அது மிகையல்ல.  இதுவரை இந்தியாவில் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம்  அலை என பாதிப்பு வந்த போதிலும்,  மூன்றாம் அலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. வருகிற ஜூன் மாதம் நான்காம்  அலை  ஏற்படக்கூடும் என கான்பூர் ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம் வருகிற 31-ஆம் தேதி முதல் கொரோனா  கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து அனைவரது செல்போன் அழைப்புகளின் போது ஒலிக்கின்ற கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பையும் காலர் ட்யூன்களையும்  முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் மற்றும் செல்போன் சந்தாதாரர்கள் இடமிருந்து மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் செல்போன் அழைப்புகளின் போது  வரும் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்புகள் விரைவில் ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது இதனால் விரைவில் ரத்தாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.