தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் அஜித்குமார் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் #AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. #AK62 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக அஜித்குமார் நடிப்பில் ரிலீஸான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் #AK61 திரைப்படத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.  இத்திரைப்படத்தையும் இயக்குனர் H.வினோத் இயக்கவுள்ளதாகவும் ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக ரதிகர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அஜித் குமாரின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.காவல்துறை அதிகாரியாக அஜித் குமார் நடித்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்தது.

தொடர்ந்து கடந்த மார்ச் 25ஆம் தேதி பிரபல OTT தளமான ZEE5 தளத்தில் ரிலீஸான அஜித் குமாரின் வலிமை திரைப்படம் தொடர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.  இந்நிலையில்  வலிமை படத்திலிருந்து அதிரடியான விசில் தீம் வீடியோ வெளியானது. அஜித்குமாரின் அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்த விசில் தீம் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.