ஆந்திராவில் 16 வயது சிறுமியை 10 பேர் சேர்ந்து 22 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரப் பிரதேசம் ராஜமுந்திரி பகுதியைச் சார்ந்த 16 வயது மைனர் சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டு இருந்தார்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார். இவருடைய குடும்பம் மிகவும்  வறுமையில் வாடி வந்ததால், தனக்குத் தெரிந்தவர்களிடம் வேலைக்குச் சொல்லி வைத்துள்ளார்.

அப்போது, சிறுமியின் குடும்பத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்த அவரது துரத்து உறவினர் பெண்ணான அனிதா என்ற பெண்மணி, வேலை வாங்கி தருவதாகக் கூறி, கடந்த மாதம்  23 ஆம் தேதி அவருடைய பெற்றோருக்கேத் தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளார்.

விபரம் தெரியாத அந்த 16 வயது சிறுமியும் உறவினர் தானே என்று நம்பி சென்றுள்ளார். அத்துடன், அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், சிறுமியைப் பெற்றோருக்கும் தெரியாமல் வேற ஒரு பகுதிக்கு அனிதா அழைத்துச் சென்றுள்ளார். 

இதனையடுத்து, சிறுமியை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு தனி அறையில் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார். அத்துடன், “வேலை வேண்டும் என்றால், இப்படி தான் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அனிதா அந்த சிறுமியை வற்புறுத்தி” உள்ளார்.

குறிப்பாக, போதைப் பழக்கத்திற்கு அடிமையான 10 ஆண்களுக்கு அந்த சிறுமியை அனிதா இரையாக்கி உள்ளார். அந்த 10 போதை ஆசாமிகளும் சேர்ந்து அந்த சிறுமியைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

அதே நேரத்தில் சிறுமி மாயமானது தொடர்பாக அவரின் தாயார் அந்த ஊர் முழுவதும் தேடிப் பார்த்துக் கிடைக்காத நிலையில், அடுத்த சில நாட்களில் அங்குள்ள கோருகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடத்தப்பட்ட சிறுமி கடந்த 15 ஆம் தேதி தானாகவே வீடு திரும்பி உள்ளார். உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், மிகவும் சோர்வுடன் வீடு திரும்பிய சிறுமியை, அவர்கள் பெற்றோர்கள் பயந்துபோய் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதனையடுத்து, அடுத்த 3 நாட்களுக்குப் பிறகு, தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி, சிறுமி தன் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கடந்த 18 ஆம் தேதி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர். அப்போது, கடத்தப்பட்ட தன் மகள் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளதாகவும், சிறுமியின் பெற்றோர் புகார் மனுவில் குற்றம்சாட்டி இருந்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியின் உடல் நிலை குறித்து மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அப்போது, சிறுமியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சிறுமியிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, “10 பேர் சேர்ந்து என்னைக் கடந்த 22 நாட்களா பாலியல் பலாத்காரம்” செய்ததைக் கூறி அழுதுள்ளார். 

மேலும், சிறுமியைக் கடத்திச் சென்ற உறவினர் அனிதாவே, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அவரை மீண்டும் அவரது வீட்டின் அருகிலேயே இறக்கி விட்டு, தனது கிராமத்திற்குச் சென்றுள்ளதாகவும், போலீசார் தெரிவித்தனர்.

16 வயது சிறுமியைக் கடத்தி சென்ற அனிதா, ஜூன் 23 அன்று தானாகவே சிறுமியை வீட்டில் இறக்கிவிட்டு தனது கிராமத்திற்குச் சென்றதாக 

போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாகத் திங்களன்று, 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

இதனையடுத்து, சிறுமியை கடத்திய அனிதா மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 10 பேர் மீதும் போக்ஸோ சட்டம் மற்றும் எஸ்.சி எஸ் டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், அந்த 10 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அத்துடன், தலைமறைவான சிறுமியின் உறவினர் அனிதாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.