ஹரியானாவில் கட்டாய பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட சிறுமி ஒருவர், தினமும் 4 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி பள்ளி சென்று சிறுமி, மாலையில் வீடு திரும்ப வில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர்.

எங்கும் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், சிறுமி மாயமானது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால், இந்த புகார் தொடர்பா போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மாயமான சிறுமி அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் உதவி உடன் மீண்டும் தனது ஊருக்கே திரும்பி உள்ளார். இதனைத்தொடர்ந்து, சிறுமியிடம் அவரது பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் விசாரித்துள்ளனர்.

அப்போத, அதே கிராமத்தைச் சேர்ந்த சில ஆண்களால் சிறுமி கடத்தப்பட்டது தெரிய வந்தது. குறிப்பாக, கடத்தப்பட்ட சிறுமி அந்த பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு பாலியல் தொழிலாளியிடம் விற்கப்பட்டதும் தெரிய வந்தது.

அத்துடன், “என்னை ஒரு இஸ்லாமிய நபர் ஒருவர் கட்டாய திருமணத்திற்கு உள்ளாக்கியதாகவும், அதன் பிறகு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்” சிறுமி அழுதுகொண்டே கூறி உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஹரியானா மகளிர் ஆணையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, சிறுமியிடம் ஹரியானா மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. 

விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் நம்ரதா கவுர, “பாதிக்கப்பட்ட சிறுமி கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டார்.

மேலும், “கடத்தப்பட்ட சிறுமியை ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஆண்கள் வரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்” என்றும் தெரிவித்தார். அத்துடன், “சிறுமி மாயமான தொடர்பாகப் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் நம்ரதா கவுர வலியுறுத்தினார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தாலும், சில காம கொடூரங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது, அனைத்து தரப்பு மக்களையும் கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதனிடையே, கடத்தப்பட்ட சிறுமி கட்டாய பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட தள்ளப்பட்டு, தினமும் 4 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஹரியானா மாநிலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.