3 வயது தம்பியின் முன்னே 6 வயது சிறுமியை தாத்தாவே பாலியல் வன்புணர்வு செய்த கொடுமையான சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள கோலார் பகுதியைச் சேர்ந்த 6 வயதான சிறுமி, தனது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி உடன் வசித்து வந்திருக்கிறார். இந்த 6 வயது சிறுமிக்கு 3 வயதில் ஒரு தம்பியும் இருக்கிறார்.

இப்படியான சிறுமி, அங்குள்ள பள்ளியில் படித்து வந்த சிறுமி, அதிக நேரம் தனது தாத்தா - பாட்டி கூடவே இருந்திருக்கிறார். அப்போது, சிறுமியின் 3 வயது தம்பியின் கண் முன்னாடியே, சொந்த தாத்தாவே, தனது 6 வயது பேத்தியிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், இது குறித்து வெளியே யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்று, பேத்தியை அந்த தாத்தா மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதனால், சிறுமி வழக்கம் போல் இல்லாமல், அவருடைய நடவடிக்கையில் சில மாற்றங்களை, சிறுமியின் தாயார் உணர்ந்திருக்கிறார்.

இது, குறித்து சிறுமியின் தாயார், தனது மகளிடம் “என்ன? எது?” வென்று விசாரித்து உள்ளார்.

அப்போது, தாத்தாவைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்களைச் சிறுமி, தனது தாயாரிடம் கூறி அழுதிருக்கிறார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், உடனடியாக இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்து உள்ளார். இது குறித்து சிறுமியிடம் விசாரித்த காவல் துறையினர், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக, சிறுமியின் தாய் வழி தாத்தாவையும், சஞ்சய் என்ற நபரையும் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து கோலார் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரகாந்த் பட்டேல் செய்தியாளர்களிடம் பேசும் போது, “6 வயது சிறுமியையும், அவருடைய 3 வயது தம்பியையும் சஞ்சய் என்ற நபர் அவருடைய வீட்டுக்குக் கூட்டிச் சென்று சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து உள்ளார்” என்று, உறுதியாகி உள்ளதாக குறிப்பிட்டார். 

“அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சிறுமியின் தாய் வழி தாத்தாவும், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து உள்ளார் என்றும், சிறுமியின் தம்பியான 3 வயதுக் குழந்தையும் அந்த நேரத்தில் அங்கு இருந்து இதனைப் பார்த்துக்கொண்டு இருந்ததாகவும்” காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

அத்துடன், “இந்த சம்பவம், எப்போது எந்த தேதியில் நடந்தது என்ற தகவலைச் சிறுமியால் சரிவரக் கூற இயலவில்லை என்றும், எனினும் நடந்தவற்றை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று, சொந்த தாத்தாவே சிறுமியை மிரட்டி, 20 ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார்” என்பதும், விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மேலும், “சிறுமியிடம் போலீசாரல் தகவல்களைக் கேட்டுப் பெற முடியாததால், உளவியல் ஆலோசகர்களின் உதவியுடன் நடந்தவை குறித்துக் கேட்டறிந்ததாக” காவல் ஆய்வாளர் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக சஞ்சய் மற்றும் சிறுமியின் தாய் வழி தாத்தா ஆகிய இருவர் மீதும் போலீசார், போக்ஸோ சட்ட சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து உள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.