மேற்கு வங்கத்தில்  மர்மமான முறையில் தெரு நாய்கள் இறந்து வருகின்றன. திடீரென நாய்கள் இறந்துக் கொண்டிருப்பதால் நோய் காரணம் என்னவென்று தெரியாமல் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள். 


விலங்குகளிடமிருந்து பரவியதாக சொல்லப்பட்ட கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டி வைத்தது. அதன் தாக்கம் இன்றளவு தொடர்ந்துக்கொண்டுள்ளது. அதன் பிறகு இந்தியாவில் பறவை காய்ச்சல் பரவ தொடங்கியது. மனிதர்களும் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது என்ற எச்சரித்துமிருந்த வேளையில், அதன் தாக்கம் தணித்திருக்கும் சூழலில் தற்போது நாய்களிடம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 


மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் பிஷ்ணுபூர் என்ற பகுதியில் கடந்த மூன்று நாட்களில் 200 அதிகமான தெரு நாய்கள் இறந்துள்ளன. இந்த சம்பவத்தை குறித்து மாவட்ட அதிகாரிகள், ‘இறந்த நாய்களின், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்காக கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த நாய்களை புதைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


நாய்களிடத்தில் ஏதாவது ஒரு பொதுவான வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக தெரு நாய்கள் இறந்து இருக்கக்  கூடும். இந்த தொற்று மற்ற விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ பரவ வாய்ப்பில்லை அதனால் பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை” எனக் கூறியுள்ளனர்.