இரு குழந்தைகள் முன்பு தாயார் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியர் அடுத்து உள்ள பிஜாலி பகுதியில் 28 வயதான இளம் பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இந்த பெண்ணிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த பெண்ணிற்கு 2 குழந்தைகள் உள்ளனர். இப்படியாக மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இந்த பெண்ணின் வாழ்க்கையில், கொரோனா வைரஸ் உருவத்தில் விதி விளையாடி உள்ளது.

அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பெண்ணின் கணவருக்கு கொரோனா வைரஸ் பாதித்த நிலையில், அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கடந்த சில வாரங்களாக அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, தனது இரு குழந்தைகளுடன் அவரது தாயார் 28 வயதா அந்த பெண், தனியாக இருந்து வருகிறார். இதனை, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் நோட்டமிட்டு வந்திருக்கிறார்கள். 

அத்துடன், இரவில் இரு குழந்தைகளுடன் தனியாக இருக்கும் இரு குழந்தைகளின் தாயான அந்த இளம் பெண்ணை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று, அந்த பகுதியைச் சேர்ந்த இருவர் திட்டமிட்டு வந்திருக்கிறார்கள். 

அதன் படி, நேற்று முன் தினம் அந்த இளம் பெண் தனது இரு குழந்தைகளுடன், தனது வீட்டில் இரவில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, நள்ளிரவு நேரம் கடந்து, அதிகாலை 2 மணி அளவில், அந்த பகுதியைச் சேர்ந்த 2 மர்ம நபர்கள், அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளனர். 

அத்துடன், அந்த வீட்டில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த இரு பிள்ளைகளின் தலையில் துப்பாக்கியை வைத்து, மிரட்டியே அந்த இரு பிள்ளைகளின் தாயை, அந்த இரு பிள்ளைகளின் கண் எதிரியிலேயே, அந்த இருவரும் மாறி மாறி பலவந்தமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அப்போது, தனது இரு குழந்தைகளின் கண் எதிரியிலேயே, தனக்கு இப்படி ஒரு கொடூரம் நடப்பதாக அந்த பெண் சத்தம் போட்டு கண்ணீர் விட்டு அழுது உள்ளார். நள்ளிரவு நேரத்தில் அந்த பெண்ணின் அழுகை சத்தம் கேட்டு, அந்த பகுதியில் இருந்த அக்கம் பக்கத்தினர் சிலர் திரண்டு வந்துள்ளனர்.

இதனால், பயந்துபோன மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்று உள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த அந்த பெண்ணின் உறவினர்கள், அது பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், தலைமறைவாக இருக்கும் அந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, இரு குழந்தைகள் முன்பு தாயார் ஒருவர், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.