தண்ணீர் கேட்டு வந்த 13 வயது சிறுமியை 22 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

அந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம் உண்மை என்பதை என்று கூறும் வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் மிகவும் அதிக அளவில் நடைபெறுவதாகவும், நாட்டிலேயே இந்த உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் தான் முதல் இடம் பிடிப்பதாகவும், தேசிய குற்றப் பதிவேடு கழகப் புள்ளி விவரங்கள் சமீபத்தில் கூறியிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

தற்போது, அது உண்மை என்று கூறும் வகையில் அதே உத்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு பலாத்கார கொலை சம்பவம் அரங்கேறி, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

அதாவது, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்ஷெஹரில் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்து உள்ளார்.

அப்போது, வீட்டை விட்டு வெளியே சற்று தொலைவில் வந்த அந்த 13 வயது சிறுமிக்குத் தாகம் எடுத்து உள்ளது. இதனால், அருகில் இருந்த ஒரு வீட்டிற்கு அந்த சிறுமி குடிநீர் கேட்டுச் சென்று உள்ளார்.

அப்போது, அந்த வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத நிலையில், அந்த வீட்டில் 22 வயதான ஹரேந்திரா என்ற இளைஞன் மட்டும் இருந்து உள்ளான்.அந்த தருணத்தில், அந்த சிறுமி மீது சபலப்பட்ட அந்த இளைஞன், அந்த சிறுமியை வீட்டின் உள்ளே அழைத்து, அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கிறான். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைத்திருக்கிறாள். இதனால், ஊர் மக்கள் திரண்டு வந்துவிடுவார்கள், நாமும் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அந்த சிறுமியை அவன் அங்கேயே கொலை செய்து விட்டு, தன் வீட்டின் அருகிலேயே குழி தோண்டி புதைத்து உள்ளான்.

இதனையடுத்து, சிறுமியை காணவில்லை என்று, அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இப்படியான நிலையில், புகார் அளித்து அடுத்த 6 நாட்களுக்குப் பிறகு நேற்றைய தினம் அந்த பகுதியில் இருந்த ஒரு குழியிலிருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இதனால், அந்த சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பிறகு, அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஹரேந்திரா என்ற இளைஞனை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தான், பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியைக் கொலை செய்ததை, அந்த இளைஞன் ஒப்புக்கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.