பட்டையை கிளப்பும் லிப்ட் பட மோஷன் போஸ்டர் !
By Aravind Selvam | Galatta | March 05, 2021 19:47 PM IST
பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.
பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி நடித்துள்ளார்.கவினின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.விறுவிறுப்பான இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Karthi's Sulthan - New Song Video | Silambarasan TR | Rashmika Mandanna
05/03/2021 07:19 PM
Nadhaswaram serial actress gets married - wedding picture goes viral!
05/03/2021 06:35 PM
Bigg Boss sensation Kavin's new Tamil film - Lift Official Promo Video!
05/03/2021 06:00 PM