அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை பகுதியின் அருகே தான் இந்த பயங்கரமான விபத்து நடந்து உள்ளது.

மியாமி கடற்கரை பகுதியின் அருகில் 12 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வந்தன. ஒட்டுமொத்தமாக அங்கு, கிட்டதட்ட 100 க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்துக்கொண்டிருந்தது. 

இந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில், அந்த 12 மாடி கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்து உள்ளது. இதனால், அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்த கட்டிட விபத்தில் கிட்டதட்ட 102 பேர் உயிரிழந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பயங்கரமான விபத்து குறித்து விரைந்து வந்த மீட்பு படையினர், அதிவேகமாக விரைந்து செயல்பட்டனர். இந்த பயங்கர விபத்தில், பலர் தற்போது வரை இடிபாடுகளில் சிக்கி உள்ளதால், அவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களைச் சிலர் மீட்கப்பட்டு, அவர்களுக்கு உடனடி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“இந்த கட்டிட விபத்திற்கு முக்கிய காரணமே, இது 40 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதால், அங்கு தற்பேர்து நடத்தப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம்” என்றும், அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

ஆனால், “இந்த கட்டத்தில், பல ஆண்டுகளாக கான்கிரீட் மறுசீரமைப்பு மற்றும் வழக்கமான பழுது போன்ற பிற பராமரிப்புகளுக்கு உட்பட்டுள்ளது என்றும், இது போன்ற அசம்பாவிதம் எதுவும் இது வரை எதுவும் நடைபெற்றது இல்லை” என்றும், காண்டோ சங்கத்தின் வழக்கறிஞர் கென்னத் டைரெக்டர் தற்போது தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, “அருகில் உள்ள கடல் நீரின் அரிக்கும் விளைவுகளைத் தாங்க கட்டிடங்கள் அவற்றின் கான்கிரீட் முகப்பை அடிக்கடி வலுப்படுத்த வேண்டும்” என்றும், அங்குள்ள அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

மேலும், “இந்த குடியிருப்பின் கட்டிட சுவர்களில் ஏற்பட்ட சேதங்களைச் சரி செய்ய வீட்டு உரிமையாளர்கள் சங்கம் தவறிவிட்டதாக” அந்த குடியிருப்பில் வசித்த வந்தவர்கள் தற்போது குற்றம்சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக, அந்நாட்டு போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பத்தால், அமெரிக்காவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள மற்றவர்கள் கடும் பீதியில் ஆழ்ந்து உள்ளனர்.