தமிழில் இயக்குனர் ஜீவா இயக்கத்தில் உள்ளம் கேட்குமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆர்யா தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் மிகுந்த பிரபலமடைந்தார். தொடர்ந்து பட்டியல், வட்டாரம், ஓரம்போ என பல திரைப்படங்களில் நடித்து வந்த ஆர்யா நான் கடவுள் திரைப்படத்திற்கு பிறகு சிறந்த நடிகராக வளர்ந்தார்.
 
நடிகர் ஆர்யா கடைசியாக இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த TEDDY திரைப்படத்தில் நடித்திருந்தார் TEDDY திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியானது குறிப்பிடதக்கது. இதையடுத்து இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3  திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

மேலும் அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் எனிமி திரைப்படத்தில்  நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்துள்ளார் .இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் புகைப்படங்களும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது 

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவதிக்குள்ளாகி வந்த நிலையில் தற்போது தடுப்பூசி அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஆனாலும் இன்றும் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த பயமும் குழப்பமும் நிலவி வரும் நிலையில் பல பிரபலங்களும் தடுப்பூசி எடுத்துக் கொண்டு தங்களது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஆர்யா தற்போது தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆர்யா தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.