சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக 2020 பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும்,விமர்சகர்கள் மத்தியிலும் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வந்த அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில்நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டது.ஹைதெராபாத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது,சூப்பர்ஸ்டார் தனது பகுதிகள் அனைத்தையும் முடித்து விட்டு சென்னை திரும்பினார்.இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளன என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவாக டைட்டில் லுக் வீடியோ வெளியானது.இந்த வீடீயோவை இதுவரை யூடியூப்பில் 8 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.தமிழில் டைட்டில் லுக் வீடியோவாக அதிகம் பார்க்கப்பட்டதாக தற்போது அண்ணாத்த உள்ளது,இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.