கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பார்வையிட சென்றுள்ளார். அப்போது அங்கு திரண்டிருந்த  பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் கார்த்திகேய சிவசேனாபதியை சூழ்ந்துக்கொண்டு அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


மேலும் கார்த்திகேய சிவசேனாபதியால் வாக்குசாவடியை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டதால் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே அங்கு விரைந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திகேய சிவசேனாபதியை வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்துள்ளார். 


 இதன்பின் அவர் காரில் ஏற முயன்ற போது,  அங்கு திரண்டிருந்த பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் காரை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டு காரில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.


இதுபற்றி கார்த்திகேய சிவசேனாபதி தரப்பில் கூறுவது, ‘’எஸ்.பி.வேலுமணி ஆட்கள் எங்களை வழிமறித்தனர். அதில் இரண்டு பேர், ‘எங்க அண்ணன் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து நிக்கிறியா. உன் கழுத்த அறுத்துடுவேன்னு சொல்றாங்க. காவல்துறை இருக்கும் போதே, அவர்களின் லத்தியை பிடுங்கி காரின் கண்ணாடி மேல் தாக்குதல் நடத்துக்கின்றனர். பெரிய வாக்கு வித்தியாசத்தில் அவர்கள் தோற்கப் போகிறார்கள். அதனால் தான் இப்படியான ரவுடிசனத்தை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். “ என்றனர்.