தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக தயாராகி வருகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதம் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று இத்திரைப்படத்தின் டீசர் வெளியானது. பார்வையற்ற பெண்ணாக நயன்தாரா வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படம் அதிரடி காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் வெளிவந்த சிறந்த திகில் திரைப்படங்களில் ஒன்றான அவள் திரைப்படத்தை இயக்கிய மில்லின்ட் ராவ் நெற்றிக்கண் திரைப்படத்தை இயக்குகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரானா R.D.ராஜசேகர் இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். 

இந்நிலையில் சிட் ஸ்ரீராமின் பிறந்த நாளை முன்னிட்டு  நெற்றிக்கண் திரைப்படத்தின்  முதல் பாடலாக இதுவும் கடந்து போகும் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோவை வெளியானது. சிட் ஸ்ரீராம் பாடியுள்ள இதுவும் கடந்து போகும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் இதுவும் கடந்து போகும் என்ற இந்தப் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திரைப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்திருக்கின்றனர் இந்த நிலையில்  ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் இதுவும் கடந்து போகும் என்ற பாடலின் ரிலீஸ் பற்றிய இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.