ஐந்து மாநிலங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு விட்டன. அனைத்து மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்று முடிவுக்கும் 500 தபால் ஓட்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.


ஒவ்வொரு சுற்றியின் முடிவை தக்கவைக்கவும் அல்லது சிறிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாகத் தபால் வாக்குகள் அமையும். தபால் வாக்குகளின் எண்ணிக்கையின் தாக்கம் ஒவ்வொரு சுற்றின் முடிவை முற்றிலும் மாற்ற கூடியதாக அமையாது என்றாலும் கூட சில தொகுதிகளின் முடிவைச் சிறிய அளவில் மாற்ற  கூடியதாக அமையும். 


தமிழகத்தை பொறுத்த வரை இந்த ஆண்டு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் போட்டதால் கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

2016 சட்டபை தேர்தலில் 3,30,380 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு 3,372 மேஜைகளும், தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 739 மேஜைகளும், வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போன்றோர் மின்னணு முறையில் அளித்த வாக்குகளை எண்ணுவதற்காக 309 மேஜைகளும் என மொத்தம் 4,420 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும்.