இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது, நாடே பரபரப்பாக இருந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது. 
நாடே உற்று கவனிக்கும் தேர்தலாக மேற்கு வங்களமும், கேரளவுக்கு அமைந்து இருந்தது.

 காரணம், மேற்கு வங்களத்தில் மம்தா பானர்ஜிக்கும், பாஜகவுக்கும் கடுமையான நேரடி மோதல் நிலவியது. தேர்தல் பிரசாரங்களின் போது மம்தா தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தேர்தல் பிரசாரங்களுக்குத் தொய்வின்றி சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டார். 


கேரளாவில்.. சபரிமலை கோவில் விகாரம், தங்க கடத்தல் விகாரம், ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி கொடுத்த விவகாரம்  போன்ற சர்ச்சைகளுக்கு பிறகு நடைபெறும் தேர்தல். 
புதுசேரியில் கடந்த ஆட்சியில் முடியும் தருவாயில், ஆட்சி நாராயாண சாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு தேர்தல் நடைபெற்றது. 


அசாம் மாநிலத்தைப் பொருத்தவரை, பாஜக Vs Congress. அனைத்து கருத்துக் கணிப்புகளின் முடிவுகளும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாகவே இருந்து வந்தது. 


தமிழகத்தை பொறுத்த வரை 5 முனை தேர்தல் நடைபெற்றது. கடந்த காலங்களில் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாக இது இருக்கிறது. 


1.  கேரளா - 140 சட்டமன்றத் தொகுதிகள்.
2.  புதுச்சேரி - 30 சட்டமன்றத் தொகுதிகள்.
3. மேற்கு வங்கம் - 294 சட்டமன்றத் தொகுதிகள் (இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்கள் இறந்ததால் அங்கு வாக்குப்பதிவு நடக்கவில்லை. 292 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது.)
4. தமிழகம் - 234 சட்டமன்றத் தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
5.  அசாம் - 126 சட்டமன்றத் தொகுதிகள்


கொரோனா ஊரடங்கு காலத்திலும் அனைத்து மாநிலங்களிலும், தேர்தல் பிரசாரங்கள் தொய்வின்றி நடைபெறத் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்து இருந்தது. 
அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கைகள் எண்ணப்பட்ட தொடங்கிவிட்டன. இன்று மாநிலம் 5 ஐந்து மாநிலங்களில் அடுத்த  முதல்வர் யார் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிடும்.