கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழிகளுள் மனித எலும்புக்கூடுகளுடன் இரும்பினாலான கூர்மையான வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கீழடி, அகரம், மணலூர் மற்றும்  கொந்தகை ஆகிய 4 இடங்களில்  7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது . 


இந்த 7ம் கட்ட அகழாய்வு பணி  கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதில் அகழாய்வு பணியில்  கீழடி , அகரம் ‌, கொந்தகை பகுதியில் நம் முன்னோர்கள் உழவுக்கு  பயன்படும் கற்கருவி, முன்னோர்கள் ‌ பொழுதுபோக்குக்கு பயன்படுத்திய பகடைக்காய், மண் ஓடுகள் , பாசிகள் போன்றவை கிடைத்துள்ளன.


இந்நிலையில் கொந்தகையில் தொல்லியல் துறையினர் அகழாய்வில் முதுமக்கள் தாழி கிடைத்ததுள்ளது. இதுவரை கொந்தகையில் சுமார் 7 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  ஒவ்வொரு முதுமக்கள் தாழியும்  4 அடி ஆழம் வரை இருக்கிறது.


இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் மனித எலும்புக்கூடுகள், 30 சென்டி மீட்டர்  நீளமுடைய இரும்பினாலான கூர்மையான வாள், சிவப்பு வண்ணம் கொண்ட வட்ட வடிவ கிண்ணம் கிடைக்கப்பெற்றுள்ளது. 


இதை குறித்து தொல்லியல் துறையினர் கூறுவது, ‘’ கொந்தகையில்  கிடைத்துள்ள முதுமக்கள் தாழி ஒரு போர் வீரனாக இருந்து இருக்க வேண்டும். அதனால் அவர் இறக்கும் போது அதுனுடன் வாள் வைத்து புதைக்கபட்டு இருக்க வேண்டும். இதனால் அப்போதே மக்கள் போர் புரிந்ததற்கு வாய்ப்பு இருப்பது தெரிகிறது. மேலும் முழு விபரங்கள் மனித எழும்புக்கூடுகள் வைத்து ஆணா, பெண்ணா, குழந்தையா என்பது ஆராய்ச்சிக்கு பிறகே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர்.