தமிழகத்துக்கு தேவையான மருந்துகள் கையுருப்பு உள்ளது. வதந்திகளை நம்பி சிலர் ரெம்டெசிவிர் மருத்துகளை வீடுகளில் எடுத்துக்கொள்கின்றனர். அவ்வாறு செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள்.” என்று சுகாதாரத்துறை செயலர் ராதகிருஷ்ணன் கூறியுள்ளார். 


மேலும் அவர், “ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது.


தேசிய அளவில் 2,620 நபர்களும் தமிழக அளவில் 78 நபர்களும் உயிரிழந்துள்ளனர். தற்போது 95,048 பேர் கொரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48,289 பேர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அதன் விழுக்காடு 50.8 ஆகும். கொரோனா கவனிப்பு மையங்களில் 8,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன் விழுக்காடு 8.85 ஆகும். 


நாட்டில் நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாகுறைக்கு சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் கூடுதலாக 2,400 ஆக்ஸிஜன் கொள்கலன்களை கூடுதலாக வழங்க உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கலனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் புறநகர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட இருக்கிறது. 


தமிழகத்தில் தேவையான மருந்துகள் கையுருப்பு உள்ளது. வதந்திகளை நம்பி சிலர் ரெம்டெசிவிர் மருத்துகளை வீடுகளில் எடுத்துக்கொள்கின்றனர். அவ்வாறு செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள். அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருத்து தேவையில்லை. மருத்துவர் ஆலோசனையில்லாம் சுயமாக இந்த மருந்தை எடுத்துக்கொள்ள கூடாது.”  என்றார்.