2 முறை கர்ப்பமாகி அபார்ஷன் செய்த காதலியை கழற்றி விட்டு விட்டு, வேறொரு பெண்ணை காதலன் திருமணம் செய்துகொண்டதால், அதிர்ச்சியடைந்த காதலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மரவனேரி பகுதியைச் சேர்ந்த 30 வயதான இந்து பிரியா, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். 

அதே போல், சேலம் செட்டிச்சாவடி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த 30 வயதான கலைச்செல்வன், டிகிரி படித்து முடித்து விட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்து பிரியா பணியாற்றி வரும் அந்த குறிப்பிட்ட சூப்பர் மார்கெட்டிற்கு கலைச்செல்வன் அடிக்கடி வந்து செல்லவது வழக்கம். 

அப்போது, கலைச்செல்வன் - இந்து பிரியா இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில், காதலாக மாறி உள்ளது. அதன்படி, அவர்கள் இருவரும் தொடர்ந்து கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். அப்படி, இந்த 5 வருட காதலில், அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது.

இந்த நெருக்கமான காதலால், காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதன் காரணமாக, காதலி இரு முறை கர்ப்பம் அடைந்தார். இதனையடுத்து, தற்போது தங்களுக்குத் திருமணம் வேண்டாம் என்று பேசி முடிவு செய்த நிலையில், அந்த பெண் இந்த 5 வருடத்தில் 2 முறை தனது கர்ப்பத்தைக் கலைத்து உள்ளார் என்றும், கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட உல்லாச காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக காதலர்கள் இருவருக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விட்டாக தெரிகிறது. 

இந்த சமயத்தில், கலைச்செல்வனுக்கு வீட்டில் வேறு பெண்ணை பார்த்து, அவரது பெற்றோர் நிச்சயம் செய்தனர். காதலன் கலைச்செல்வனின் தந்தை ராஜ், அந்த பகுதியில் திமுக ஊராட்சி துணை செயலாளராக உள்ளார். 

மேலும், கலைச்செல்வனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆன விசயம், காதலி இந்து பிரியாவிற்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் காதலன் மீது புகார் அளித்தார். ஆனால், போலீசாரோ அந்த புகாரைப் பெற்றுக் கொண்டும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. 

ஆனால், அந்த பெண் போலீசாரிடம் அடம் பிடிக்கவே, இரு தரப்பையும் அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, மறுநாளே காதலன் கலைச்செல்வனுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதனால், இன்னம் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த இந்து பிரியா, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து, திடீரென கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். ஆனால், அங்கு பணியில் இருந்து இதனை பார்த்த போலீசார், ஓடிச் சென்று இந்து பிரியாவை மீட்டனர். அவர் மீது தண்ணீரை ஊற்றினர். 

அப்போது இந்து பிரியா, கையில் ஒரு லெட்டரை வைத்திருந்தார். அதை வாங்கி பார்த்த அம்மாபேட்டை மகளிர் போலீசார், “கலைச்செல்வனிடம் பணம் வாங்கி கொண்டு, தான் கொடுத்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று புகாராக எழுதி இருந்தார். இதனையடுத்து, இளம் பெண் இந்து பிரியாவை சமாதானம் செய்த போலீசார், அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.