நடிகர் ரஜினிகாந்த் நேற்று டிசம்பர் 12-ம் தேதி தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த முறை ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை உறுதிசெய்து ,  ‘இப்ப இல்லன்னா.. எப்பவும் இல்ல..’ என்று கூறியிருந்தார். இந்த வார்த்தையைக்  குறிக்கும் வகையில் Now or Never என்று எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடினார். 


ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வந்தனர். பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இலவசப் பேருந்து மற்றும் ஆட்டோ சேவையைத் தொடங்கிவைத்து அன்னதானம் வழங்கினர்.

 `ரஜினியின் அரசியல் புரட்சிக்கு நாங்களும் தயார்’ என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வாணியம்பாடி பகுதியில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதேபோல், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் ரஜினி மக்கள் மன்றத்தினர் சிறப்பு பிரார்த்தனைகளைச் செய்து வந்தனர்.


பல வசதிகள் வந்த பிறகும் ரஜினிகாந்த தனது பழைய உடைகள், கார்கள், புகைப்படங்களை பொகிஷமாக பாதுக்காத்து வருகிறார்.  ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான ஐஸ்வர்யா , ரஜினி முதலாவதாக வாங்கிய காரரை இன்ஸ்டாகிராம் பதிவேற்றியுள்ளார். அந்த முதல் கார் உடன் ரஜினி நிற்பது போன்ற  புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். TMU 5004 என்ற எண் கொண்ட அந்தக் காரை ரஜினி இன்று முதல் பராமரித்து வருகிறார். 
ரஜினி தான் வாங்கிய முதல் காருடன் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி  வருகிறது.