மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான திரு.கமல்காஹசன் மதுரையில் தனது முதல் நாள் பிரச்சாரத்தை துவங்கினார்!

 

2021  தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதற்கான பிரச்சாரத்தை ஒவ்வொரு கட்சிகளும் மேற்கொள்ளும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் கூடுவதில் நிறைய பிரச்சனைகள் இருந்துள்ளது. அதனால் நிறைய பிரச்சாரங்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் இடங்களுக்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்க இருக்கிறார்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/zHc4PmcIfLg" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

 

பிரச்சாரம் நடத்தும் இடங்களுக்கு செல்வதற்காக அவர் விமான நிலையம் வந்த போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது “ உங்கள் வாழ்த்துக்களுடன் இன்று பிரச்சாரத்திற்கு புறப்படுகிறோம். பல இடங்களில் அனுமதி கொடுத்துள்ளார்கள், ஆனால் கடைசி நிமிடத்தில் நகரங்களுக்குள் எங்களுக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளார்கள். எங்கள் பிரச்சாரம் துவங்கி விட்டதாகவே நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம். சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் செயல்பட வேண்டிய முறையில் செயல்படுவோம்.உங்கள் வாழ்த்துக்களுடன் பிரச்சாரத்திற்கு செல்கிறோம் என்றார். பின்பு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு,  புதிய ஒரு நல்ல சீரமைத்த  தமிழகத்தை பற்றி தான் பிரச்சாரத்தில்  முன்னிலைப்படுத்தப்படும் என்றும்,தமிழகம் ஏற்கனவே சீரழிந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அது மக்களுக்கே தெரியும்.அதை எடுத்து புலம்பிக்கொண்டிருப்பதில் பிரயோஜனம் இல்லை, இனி செய்ய வேண்டியதைப் பற்றி மக்கள் நீதி மய்யம் பேசும் என்று தெரிவித்தார்.

தனது முதல் நாள் பிரச்சாரத்திற்காக அவர் மதுரை சென்றபோது, விமான நிலையத்தில் ரசிகர்கள் தொண்டர்கள் என திரளானோர் கமலஹாசனை வரவேற்றனர். திறந்த வெளி காரில் நின்றபடி ரசிகர்களுக்கு விருந்தளித்தார் கமலஹாசன்.