பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் டி.வி.நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. 


தனக்கென ஒரு ரசிக்கப்பட்டாளத்தை பெற்று இருந்த சித்ராவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.  5-வது நாளாக நேற்று அவரிடம் நசரத்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஏற்கனவே ஹேம்நாத்தின் தந்தை, சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், ஓட்டல் ஊழியர்கள், உடலை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்  உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர்.


இன்று இந்த வழக்கில் ஆர்.டி.ஓ. விசாரணை தொடங்கி இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது. இதன் முதற் கட்டமாக  , சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடமும் விசாரணையை தொடங்கிறது.

ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்து அறிக்கை கொடுக்கும் வரை, ஹேம்நாத்தின் உள்பட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் மீண்டும்  விசாரணை இருக்கும் எனவும் அனைவரும் கொடுக்கும் தகவல்கள் அடிப்படையில் மாறுப்பட்ட கருத்துக்கள் கிடைத்தால், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.