இரவு நேர ஊரடங்கு காரணமாக, பகல் நேரத்தில் வெளியூர்களுக்குச் செல்ல நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் வேகம் எடுத்து வருவதால், நாள் தோறும் பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வருகிறது.

அதன் படி, நேற்றைய கொரொனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், தமிழகத்தின் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது நாளை இரவு முதல் இரவு நேர ஊரடங்கைப் பிறப்பித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

இதனால், நாளை இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இவற்றுடன் வார இறுதி நாட்களான ஞயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இப்படியாக, இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்களான ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் தற்போது அமலுக்கு வந்து உள்ளன.

இந்த நிலையில், இரவு நேர ஊரடங்கு காரணமாக நாளை முதல் தென் மாவட்டங்களுக்குப் பகல் நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டு உள்ளன. 

அதன் படி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு நாளை முதல் பகல் நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையானது மேலும் அதிகப்படுகின்றன. இவற்றுடன், இன்னும் தேவைக்கு ஏற்ப கூடுதலான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவாக்கப்பட்டு உள்ளன.

மேலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகளை இயக்க அனுமதியில்லாததால், கோயம்பேட்டில் இருந்து நாளை முதல் பகல் நேரங்களில் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், “தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில், பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்” என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்து உள்ளது.

குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களுக்கு அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது