கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதைத்தொடர்ந்து அசல், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து அசத்தினார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்தார் சமீரா. இந்த அழகான தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து லாக்டவுன் நேரத்தில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

நடிகை சமீராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள சமீரா, "நான் நேற்று கோவிட்-19-க்கு பாசிட்டிவாக சோதனை செய்தேன். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.

அவர் தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதாக தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். சாஸி, சாசு, கடவுளின் கிருபையால், தனியாக பாதுகாப்பாக இருக்கிறார்கள். நாங்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்போம், தொடர்ந்து நேர்மறையான உற்சாகத்தோடு இருப்போம். என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருப்பதை நான் அறிவேன். நேர்மறையான உறுதிமொழிகளுடன் வலுவாக இருக்க வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம். பாதுகாப்பாக இருங்கள் என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமீரா ரெட்டி தெரிவித்திருந்தார்.

பணி முன்னணியில், சமீரா வெள்ளித்திரையில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். பெரும்பாலும் அவரது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வீடியோக்கள் வெளியிடுவதை காணலாம்.

சமூக வலைத்தளங்களில் திரைப் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை பதிவு செய்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் நடிகர் பவன் கல்யாண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பல பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவுக்கு பலி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

sameera reddy tested positive for covid 19 corona virus