தமிழகத்தின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் விவேக்.தனது காமெடி மூலம் பல படங்களில் ரசிகர்களை சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்தவர்.படங்களில் நடிப்பதை தவிர சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பல சமூகநலன்களை செய்துள்ளார் விவேக்.

ஜனங்களால் சின்னக்கலைவாணர் என்று அன்பாக அழைக்கப்பட்ட இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி அரசு கௌரவித்திருந்தது.பல கோடி பேரால் ரசிக்கப்பட்டு வந்த விவேக் நேற்று திடீரென உடல்நலக்குறைவால் காலமானார்.கொரோனா அச்சத்தையும் தாண்டி பல ரசிகர்கள் பிரபலங்கள் விவேக்கின் உடலுக்கு தங்கள் இறுதி மரியாதையை நேரில் சென்று செலுத்தினர்.விவேக்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர், விவேக்கின் மனைவி அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி,
எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி.இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.