போதை ஏறி புத்தி மாறி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். அதனை தொடர்ந்து அன்புள்ள கில்லி என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆறு வருடங்களாக திரையுலகில் சரியான வாய்ப்பு தேடி, வெகு பொறுமையுடன் காத்திருந்து, கிடைத்த வாய்ப்பில் தன் திறமையை நிரூபித்து இன்றைக்கு நட்சத்திர நடிகையாக மாறியுள்ளார் துஷாரா. 

தற்போது திரையுலகின் மிக முக்கியமான இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆர்யா நடித்துள்ள இத்திரைப்படம் வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதற்காக தனது உடலமைப்பை முழுமையாக மாற்றி நடித்துள்ளார் ஆர்யா. 

படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா, காளி வெங்கட், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குனராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குனராக அன்பறிவு ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் விருந்தாக சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. அதன் பின் படத்தின் பாத்திரங்கள் கொண்ட சார்பட்டா பரம்பரையின் உலகை காண்பித்தனர் படக்குழுவினர். அந்த வீடியோவும் ட்ரெண்டானது. 

இந்நிலையில் நடிகை துஷாரா, சார்பட்டா பரம்பரை கெட்டப்புடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 80-களில் இருக்கும் லுக்கில் உள்ள துஷாராவை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். மாரியம்மா என்ற பாத்திரத்தில் துஷாரா நடிக்கிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dushara Vijayan🧿 (@dushara_vijayan)