காதலிக்கு பிறந்த குழந்தையின் டி.என்.ஏ. காதலனுடையது இல்லை என்பது தெரிய வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட காதலன், காதலியின் தாயார் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து நீதி பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த சந்தோஷ் என்ற நபருக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நட்பு, நாளடைவில் 
அவர்களுக்குள் காதலாக மலர்ந்து உள்ளது. இதனால், அவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம், இருவரின் வீட்டிற்கும் தெரிய வந்தது. இதனால், தொடக்கத்தில் கடும் அதிர்ச்சியடைந்த இரு வீட்டார் பெற்றோர், அதன் பிறகு, பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற முன் வந்தனர். அதன் படி, காதலர்கள் இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இருவரும் பக்கத்துப் பக்கத்து வீடு என்பதால், அவர்களுக்குள் திடீரென்று நிலத்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால், காதலன் சந்தோஷின் குடும்பம், தங்களது வீட்டை அங்கிந்து வேறு பகுதிக்கு மாற்றி சென்றனர். அதன் பின்னர், சந்தோஷ் தனியார் பொறியியல் கல்லூரியில்  பி.டெக் படித்து கொண்டிருந்தார். அப்போது தான், அவரது முன்னாள் காதலியால், அவரது வாழ்க்கையில் திடீரென்று புயல் வீசத் தொடங்கியிருக்கிறது.

அதாவது, இதற்கு முன்பு காதலித்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருந்த பெண்ணின் தாய், இடம் பெயர்ந்து சென்ற பிறகு, “முன்னாள் காதலன் சந்தோஷ் எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சந்தோஷ் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் காரணமாக, அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 95 நாட்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர், சந்தோஷ்க்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் வெளியே வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சந்தோஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதன்படி, அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசொதனை சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் தனது முன்னாள் காதலிக்கு பிறந்த அந்த குழந்தை சந்தோஷ் என்ற இளைஞருக்கு பிறக்க வில்லை என்பது தெரிய வந்தது. அத்துடன், சந்தோஷ், தனது முன்னாள் காதலியை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்பதும் தெரிய வந்தது. 

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவில், சந்தோஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்த வழக்கில் இருந்து முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து, சந்தோஷ் சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தை நாடினார். அங்க, “தன் மீது பொய்யான புகார் அளித்து, தன்னை சிறையிலடைத்த முன்னாள் காதலியின் தாயாரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு” மனு தாக்கல் செய்தார். 

அதன் படி, அந்த புகார் மனுவில் கூறியுள்ள சந்தோஷ், “பொய்யாக புகார் அளித்ததன் காரணமாக, நான் சிறை சென்றதால், தன்னுடைய படிப்பை என்னால் தொடர முடியவில்லை” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “இது வரை சுமார் 2 லட்சம் ரூபாய் வரை என்னுடைய வழக்கு செலவுக்காக நான் வழக்கறிஞருக்கு செலவழித்து உள்ளேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.

மேலும், “என் மீதான பொய் வழக்கால், எனக்கு ஓட்டுனர் உரிமம் மறுக்கப்பட்டது என்றும், பொறியாளராக பணியாற்ற வேண்டிய நான் தற்போது அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்” கவலையுடன் தெரிவித்து இருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “பொய்யான பாலியல் புகார் கொடுத்து சந்தோஷின் எதிர்காலத்தைப் பாழாக்கியதால், அவருக்கு நஷ்ட ஈடாக 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்” என்றும், பொய்யான புகார் அளித்த பெண்ணுக்கு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.