தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.கொரோனா தாக்கம் காரணமாக மூன்று மாதங்கள் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.கொரோனா பாதிப்பு காரணமாக சில தொடர்களில் நட்சத்திரங்கள் மாற்றப்பட்டனர்.

சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.சில தொடர்கள் நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாததால் கைவிடப்பட்டன.பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.

சன் டிவி தற்போது புதிய தொடர் ஒன்றை அறிவித்துள்ளது.சுந்தரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளனர்.இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொடரை கலர்ஸ் தமிழில் திருமணம் தொடரை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த தொடரின் நாயகியாக கேப்ரியல்லா நடித்துள்ளார்,இவர் டிக்டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறியவர்.இதனை தொடர்ந்து சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்து ஐரா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார்.ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தற்போது இந்த தொடரின் மூலம் சன் டிவியில் என்ட்ரி கொடுக்கிறார் கேப்ரியல்லா.

இந்த தொடரின் ஒளிபரப்பு தேதியை சன் டிவி தற்போது அறிவித்துள்ளனர்.இந்த தொடர் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் ஒளிபபராகும் என்று அறிவித்துள்ளனர்.ஒளிபரப்பு நேரத்தை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.