பெண்ணுக்கு லிப்ட் கொடுத்த போலீசார் ஒருவர், தனது நண்பர்களோடு சேர்த்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்சில் உள்ள காவல் நிலையத்தில் தர்மேந்திர குமார் என்பவர், போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வந்தார்.

இப்படியான நிலையில், தனது காவலர் பணியை முடித்துக்கொண்டு தர்மேந்திர குமார், தனது நண்பர் பிரதீப் குமார் உடன் ஒரு காரில் சென்று உள்ளார்.

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண் ஒருவர், மருந்து கடையில் வீட்டிற்கு தேவையான சில மருந்துகளை வாங்கிக்கொண்டு, தனது வீட்டிற்கு செல்வதற்காக அங்குள்ள பேருந்து நிலையில் இரவு நேரத்தில் காத்துக்கொண்டு இருந்து உள்ளார். 

ஆனால், வெகு நேரம் ஆகியும் பேருந்து வராத நிலையில், நீண்ட நேரம் காத்திருந்த அந்த இளம் பெண், அதன் பிறகு கால் டாக்சி புக் செய்து உள்ளார்.

இதனால், கால் டாக்சி வரும் வரை, அந்த பெண் குறிப்பிட்ட அந்த பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, தனது நண்பரோடு காரில் வந்த போலீஸ் கான்ஸ்டபிள் தர்மேந்திரா, அந்த இளம் பெண்ணை பார்த்து தன்னுடைய காரில் வருமாறு அழைத்திருக்கிறார். 

அதற்கு, அந்த பெண், “எப்படியாவது வீட்டிற்கு சென்றால் போதும்” என்று, நினைத்துக்கொண்டு, அந்த பெண்ணும் அதற்கு சம்மதித்து, அந்த போலீசாரோடு அந்த காரில் சென்றிருக்கிறார். 

இதனையடுத்து, போலீஸ்காரர் தர்மேந்திராவும் அவரின் நண்பரும் அந்த இளம் பெண்ணை அந்த பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று, இருவரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

அத்துடன், “இந்த பலாத்காரம் குறித்து, வெளியே யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்றும், அதை மீறி வெளியே சொன்னால், உன்னை கொலை செய்து விடுவோம்” என்றும், அந்த போலீஸ்காரர் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். 

கடந்த 9 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அந்த பெண், மறு நாள் அந்த போலீசாரின் கொலை மிரட்டலுக்கு பயப்படாமல், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

அந்த பெண்ணின் புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து போலீசார், தர்மேந்திராவையும் அவரின் நண்பரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

இந்த விசாரணையின் போது, “தர்மேந்திந்திரா மீது ஏற்கனவே பணிக்கு ஒழுங்காக வராத காரணத்தால் விசாரணை நடைபெற்று வருவதும்” தெரிய வந்தது. இதனிடையே, இளம் பெண்ணுக்கு தங்களின் காரில் லிப்ட் கொடுத்த போலீஸ்காரர் ஒருவர், தனது நண்பனோடு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.