பிரபல பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில், பாதிரியார் மீதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஐதரபாத்தை சேர்ந்த பிரபல பாடகி ஒருவர், தனது 15 வயது மகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தங்கையின் வீட்டில் விடுமுறைக்காகக் கொண்டு வந்து 
விட்டிருக்கிறார். 

இப்படியான சூழ்நிலையில் தான், சிறுமியின் சித்தி கணவரான ஜான் ஜெஷில், சிறுமியின் சித்தி ஷகீனா ஷான் மற்றும் உறவினரின் மகன் கிளாரோ ஆகியோர் சேர்ந்து சிறுமிக்கு மாறி மாறி பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. 

முக்கியமாக, அந்த 15 வயது சிறுமியை சென்னை கீழ்பாக்கம் அலைவ் சர்ச்க்கு அழைத்து செல்லும் போது, சர்ச் பாதிரியாருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சர்ச் பாதிரியார் ஹென்றி என்பவர், அந்த சிறுமிக்கு பல முறை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

அத்துடன், இந்த பாலியல் தொல்லை தொடர்ச்சியாகவே நடக்கவே, மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து, பாடகியான தனது அம்மாவிடம் தொலைப்பேசி மூலம் கூறி, அழுது கதறி உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், ஐதராபாத்திலிருந்து உடனடியாக சென்னை வந்து உள்ளார்.

சென்னை வந்த சிறுமியின் தாயார், கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், முதலில் சிறுமியை அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்து உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சர்ச் பாதிரியார் உட்பட சிறுமியின் உறவினர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

முக்கியமாக, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி உட்பட மொத்தம் 4 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.