பெண் ஒருவர் தனது ஆண் நண்பரை வாடகைக்குக் குடி வைத்த நிலையில், அந்த நண்பருடன் அந்த பெண் தலைமறைவாகிக் கடத்தல் நாடகமாடி சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டை குமார் என்பவர், கோவை பாப்பம்பட்டியில் உள்ள பிரபு என்பவரின் வீட்டில் வாடகை தங்கி, ஜேசிபி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். 

முக்கியமாக, இந்த கோட்டை குமார், வாடகைக்கு இருக்கும் வீட்டின் உரிமையாளர் பிரபுவின் மனைவி பத்மஸ்ரீயின் நெருங்கிய நண்பர் ஆவர். பிரபுவின் மனைவி் பத்மஸ்ரீயின் ஆலோசனையின் படியே, கோட்டை குமாரை தனது வீட்டில் குடியமர்ந்திருக்கிறார் பத்மஸ்ரீ.

இவர்களது நட்பு, நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக் காதலாக மாறி உள்ளதாகவும், இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக, இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று, அங்கு யாருக்கும் தெரியாமல் தங்கியிருந்து கள்ளக் காதல் இன்பத்தைத் தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், கடந்த 15 ஆம் தேதி பத்மஸ்ரீயின் கணவர் பிரபு, வெளியே சென்றிருந்தார். அப்போது, பிரபுவின் அவரது தாயாரும், மனைவி பத்மஸ்ரீயும் மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளனர். 

அந்த நேரம் பார்த்து முகமூடி அணிந்துகொண்டு வந்த நபர் ஒருவர், பிரபுவின் தாயை மிரட்டி பத்மஸ்ரீயை கடத்தி சென்று உள்ளார். அதன் பின்னர், பிரபுவுக்கு போன் செய்த அந்த மர்ம நபர், “நீ ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் தான், உன் மனைவியை விடுவிப்பேன் என்றும், இல்லையென்றால் உன் மனைவியை மும்பையிலோ, பெங்களூரிலோ பணத்துக்கு விற்றுவிடுவேன்” என்றும், கடுமையாக மிரட்டி இருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கணவன் பிரபு, அங்குள்ள காவல் நிலையத்தில் தனது மனைவி கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்து உள்ளார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

அதாவது, “பிரபுவின் மனைவி பத்மஸ்ரீயை கடத்தியது, அவரது வீட்டில் குடியிருந்த கோட்டை குமார்” என்பது தெரிய வந்தது. 

அத்துடன், மனைவி பத்மஸ்ரீ அவ்வப்போது தலைமறைவாகி கோட்டை குமாருடன் சுற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இப்படி கடத்தல் நாடகம் ஆடும்போதெல்லாம், அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பிரபுவை மிரட்டி பணம் பறிப்பது, அதன் பின்னர் மனைவியை விட்டு விடுவதுமாக இருந்து உள்ளார். இந்த கடத்தல் நாடகத்துக்குப் பிரபுவின் மனைவி பத்மஸ்ரீயும் முழுக்க முழுக்க உடந்தையாக இருந்ததும்” போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில், மனைவி மீது இருந்த அதீத அன்பான் காரணமாகவும், இந்த விசயம் வெளியே தெரிந்தால் குடும்ப கௌரவம் போய்விடும் என்ற பயத்தினாலும், பிரபு காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல், கடந்த சில முறைகள் பணம் கொடுத்து வந்துள்ளார். 

இதே போல், கடந்த 3 முறையும் இதே போல் மனைவியை கத்திய போது, யாரும் தெரியாமல் சத்தமில்லாமல் பணத்தைக் கொடுத்து, கோட்டை குமாரிடமிருந்து மனைவியை மீட்டதாகவும் பிரவு கூறியுள்ளார். 

இந்த நிலையில் தான், மீண்டும் அதே போன்ற ஒரு கடத்தல் நாடகம் அரங்கேறியதால், பொறுமை இழந்த கணவன் பிரபு, சூலூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 

இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள கோட்டை குமார், பிரபுவின் மனைவி பத்மஸ்ரீயை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.